🎼💮🎼💮🎼💮🎼💮🎼💮🎼
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*மே 22*
🎼💮🎼💮🎼💮🎼💮🎼💮🎼
🎛️ *இன்றைய நித்தியகடன்*
🎛️ அதிகாலை எழுந்து நிதானமாக, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🎛️ *இன்றைய சாதகம்*
🎛️ சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
🎛️ *இன்றைய நற்சிந்தனை*
🎛️ எந்தெந்த விஷயத்தில் எல்லாம் நமக்கு தெளிவு இல்லையோ, அந்த விஷயத்தில் எல்லாம் இருந்து நாம் உடலில் நோயையும், மனதில் குழப்பத்தையும், வாழ்க்கையில் சிக்கல்களையும் உருவாக்கிக் கொள்வோம். நம்முடைய அறிவுக்கும், சிந்தனைக்கும் தெரிந்த விஷயத்தில் மட்டும்தான் நம்மால் திறன்பட செயல்பட முடியும். திறமையோடு செய்யப்படும் அனைத்து வகையான தொழில்களும், வாழ்க்கையின் ஒரு படி உயர்வுக்கான அடித்தளமாக அமையும்.
🎛️ *இன்றைய தற்சோதனை*
🎛️ அடிப்படையில் நாம் பெற்றுள்ள தெளிவும், அறிவின் உயர்வும், சிக்கலில்லாத, துன்பமில்லாத வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையும் சிறப்பு மனோ நிலையாகும். இந்த சிறப்பான மனோநிலையை, அனைத்து மனித சமுதாயமும் இயல்பாக பெற்று வாழ்வை நிறைவாக வாழ வேண்டும். "தற்சோதனை" இந்த நிறைவான தளத்தை அமைத்துக் கொடுக்க வல்ல அற்புதமான பயிற்சியாகும்.
🎛️ *இன்றைய பண்புப் பயிற்சி*
🎛️ எதனோடு நாம் தொடர்பு கொண்டாலும் அது ஆரம்பத்தில் தெளிவாகவும், முழுமையாகவும் நமக்கு புரிந்து விடாது. அதைப் பற்றிய உண்மையை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் நிச்சயமாக, காலம் என்பது தேவைப்படும். அதுவரையில் பொறுமையோடு இருந்து அதனோடு இணைந்து பழகுங்கள். பொறுமையோடு இருந்து சிந்தித்து வாழும் பண்பே, மனிதனை மெய்ஞானத்தில் உயர்த்தும் பண்பாகும். வாழ்க வளமுடன்...
🎛️ *இன்றைய மூலிகை*
🎛️ *கருஞ்சீரகம்* தேவேயான பொருள் கருஞ்சீரகம் – 50gm,
வெந்தயம் – 250gm,
ஓமம் – 100gm
🎛️ மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனித்தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும். இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்,இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.
🎛️ தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது. தேவையான கொழுப்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது, இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.
🎛️ நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது, மலச்சிக்கல் நீங்குகிறது,
பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது. மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது, ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது. நீரிழிவு நோய் கட்டுக்குள் வைக்க படுகிறது.
🎛️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🎛️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🎛️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🎛️ *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
Comments
Post a Comment