💢♾️💢♾️💢♾️💢♾️💢♾️💢
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*மே 21*
💢♾️💢♾️💢♾️💢♾️💢♾️💢
🎑 *இன்றைய நித்தியகடன்*
🎑 அதிகாலை எழுந்து நிதானமாக, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🎑 *இன்றைய சாதகம்*
🎑 வெள்ளிகிழமை
காலை, மாலை இரண்டு
வேளையும் சாந்தி தவம்.
🎑 *இன்றைய நற்சிந்தனை*
🎑 இருவேறுபட்ட நிலையுடைய உயர்திணையோ அக்ரினையோ எதுவாயினும், இரண்டும் ஓர் இடத்தில் இருக்கும் போது ஒன்றினுடைய தன்மை மற்றொன்றை பாதிக்கும். இதில் நன்மையும் நடைபெறலாம், தீமையும் நடைபெறலாம். எது வலிமையானதோ அதுவே இறுதியில் வெல்லும். இந்த விஞ்ஞானத்தை அதனடிப்படையில் நாம் நன்றாக சிந்தித்து புரிந்துகொண்டு, அதற்கு தக்கவாறு நம்மை நாமே தகவமைத்துக் கொள்ள வேண்டும். எப்போதும் விழிப்பு நிலையோடு இருந்து நம்மை காத்துக் கொள்ள வேண்டும்...
🎑 *இன்றைய தற்சோதனை*
🎑 எது எப்போது நடைபெறும் என்று எண்ணி கணித்துச் சொல்ல எதுவுமில்லை. எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம். அதற்கான சாத்தியக்கூறுகள் நிறைய இருக்கிறது. ஆதலினால் எப்போதும் நம்மை காத்துக் கொள்ளும் அயரா விழிப்பு நிலையோடும், பொறுப்போடும், கடமையோடும் இருந்து நம் வாழ்க்கை சூழ்நிலையில் நடைபெறக்கூடிய, அனைத்து நிகழ்ச்சிகளையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
🎑 *இன்றைய பண்புப்பயிற்சி*
🎑 அவரவருடைய பாவமும் புண்ணியமும் அவரவரோடு போகும். என்னுடைய பாவமும் புண்ணியமும் என்னோடு போகும் என்பதற்கு இயற்கை சட்டத்தில் ஒரு விதிவிலக்கு உண்டு. அதுதான் காந்தத் தத்துவம். காந்தம் யாரையும் தனியாக விடுவது இல்லை. எல்லோருக்குள்ளும் சுழன்று இயங்கி பிரபஞ்சமாக, உருப்பெற்று நிற்கும் பூரணப் பொருளே காந்தம். இத்தகைய காந்தமே நம்முள் மனமாக, உயிராக, அறிவாக இயங்குகிறது. இத்தகைய காந்த வளத்தோடு வாழ்வில் எல்லா வெற்றியும், மகிழ்ச்சியும், மனநிறைவும் பெறுவோமாக. வாழ்க வளமுடன்...
🎑 *இன்றைய மூலிகை*
🎑 *நிலவேம்பு குடிநீர்* தேவையான பொருள் தண்ணீர் -200ml
நலவேம்பு ஒரு டேபில் ஸ்பூன்.
🎑 செய்முறை:- நிலவேம்பு ஒரு டேபில் ஸ்பூனை. 200ml தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும் 100ml ஆகும் அளவிற்கு கொதிக்க விடவும்.
🎑 *முக்கிய குறிப்பு:-* காலையில் தயாரித்து. காலை வெறும்
வயிற்றில் பருகவும். மூன்று வயது குழந்தைகளுக்கு 50ml பெரியவர்களுக்கு 100ml
நோய் எதிர்புசக்தி அதிகரிக்கும்.
(வைரஸ் காய்ச்சல் குணமாகும்)
🎑 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🎑 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🎑 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🎑 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment