நித்தியகடன் மே 18 2021

🎲🔶🎲🔶🎲🔶🎲🔶🎲🔶🎲

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*மே 18*

🎲🔶🎲🔶🎲🔶🎲🔶🎲🔶🎲

♦️ *இன்றைய நித்தியகடன்*

♦️ அதிகாலை எழுந்து நிதானமாக, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

♦️ *இன்றைய சாதகம்*

♦️ செவ்வாய்கிழமை 
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
 
♦️ *இன்றைய நற்சிந்தனை*

♦️ ஒரு பொருளை பார்ப்பதற்கு கண்கள் தேவை, ஒரு வாசனையை நுகர்வதற்கு மூக்கு தேவை, ஒரு ஓசையை கேட்பதற்கு காது தேவை, ஒரு சுவையை உணர்வதற்கு நாக்கு தேவை, ஸ்பரிசத்தை உணர்வதற்கு தோல் தேவை இவைகளின் வழியாகத்தான் நம் வாழ்க்கை அனுபவங்கள் ஏற்படுகிறது. இந்த புலன்கள் இல்லாமல் நம் வாழ்க்கை இல்லை. இருந்தபோதும் இந்த புலன்களை, புலன் அனுபவங்களை கடந்து, அறிவின் வழியாக அனைத்தையும் உணர்ந்து, தெளிந்து வாழ்க்கையை சிறப்பாக, நிறைவாக வாழ வேண்டும்.

♦️ *இன்றைய தற்சோதனை*

♦️ புலன்களை புரிந்து கொள்ளாமல் புலன்களை அடக்க முடியாது.இந்த விதியும் கோட்பாடும் எல்லாவற்றுக்கும் பொருந்தும். பணத்தை புரிந்துகொள்ளாமல் பணத்தை கடக்க முடியாது. பசியை புரிந்துகொள்ளாமல் பசியை அடக்க முடியாது. ஆசையை புரிந்து கொள்ளாமல் ஆசைகளை அடக்க முடியாது. தேவைகளை புரிந்து கொள்ளாமல் தேவைகளை கடக்க முடியாது. தற்சோதனை இல்லாமல் பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பம் எதையுமே புரிந்து கொள்ள முடியாது, அதை கடக்கவும் முடியாது. "தற்சோதனையே நம்மை நாம் செதுக்கும் உளியாகும்"

♦️ *இன்றைய பண்புப் பயிற்சி*

♦️ சின்னதாக, மெல்லியதாக, மெதுவாக துவங்குவோம். நம்மை நாமே செதுக்குவதற்கு, பண்பில் உயர்வதற்கு‌‌ நம்முடைய எண்ணம், சொல், செயல்களை ஒழுங்குபடுத்திக் கொள்வோம். நம்முடைய பார்வையை ஒழுங்கு படுத்திக் கொள்வோம், நம்முடைய சுவை உணர்வை ஒழுங்கு படுத்திக் கொள்வோம் சிறிது, சிறிதாக இவற்றிலெல்லாம், தற்காலத்தில் எவ்வளவு முடியுமோ, எதில் முடியுமோ, அவற்றிலெல்லாம் முயற்சி செய்வோம். காலம் கனியட்டும், களம் அமையட்டும், அந்த ஆற்றல் களத்தில், முயற்சியின் குவியலில் நின்றுகொண்டு நாளை பெரியதாக ஞானம் செய்வோம். வாழ்க வளமுடன்...

♦️ *இன்றைய மூலிகை*

♦️ *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.

♦️ இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும். 

♦️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

♦️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

♦️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

♦️ *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments