💮🌹💮🌹💮🌹💮🌹💮🌹💮
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*மே 17*
💮🌹💮🌹💮🌹💮🌹💮🌹💮
💦 *இன்றைய நித்தியகடன்*
💦 அதிகாலை எழுந்து நிதானமாக, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
💦 *இன்றைய சாதகம்*
💦 திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
💦 *இன்றைய நற்சிந்தனை*
💦 அவரவர்களுடைய உடலிலும், உயிரிலும், மனதிலும் இருக்கின்ற மர்மங்களை தெரிந்துகொள்வதற்கு, உள்ளிருந்து தூண்டுதல்கள் உந்துசக்தியாக இறைவனால் ஏற்படுத்தப்படுகின்றது. இதனை புலனின்ப அறிவில் புரிந்துகொண்டு நாம் தவறுதலாக செயல் புரிகிறோம். சிற்றின்பங்களில் கேளிக்கைகளில் அந்த உந்துதலை திசைமாற்றி செயல்படுத்தி விரயமாக்கி விடுகிறோம். மீண்டும் மீண்டும் இதே போல் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது "நாமும் அவனை புரிந்துகொண்ட பாடில்லை அவனும் நம்மை விட்டபாடில்லை" எப்போது உங்களைப் பற்றிய உண்மைகளை உணர்ந்து கொள்ளப் போகிறீர்கள்...
💦 *இன்றைய தற்சோதனை*
💦 நமக்குள்ளாக இருக்கும் மர்மங்களை தெரிந்து கொள்ளாமல், நம்மால் நிறைவான ஒரு வாழ்க்கையை வாழ இயலாது. வாழத் தெரியாமல் வாழும் போது அதில் தவறுகளும், இன்னல்களும், இடர்பாடுகளும் அதிகமாக இடம் பிடித்துவிடும். இவைகளிடம் உங்கள் வாழ்க்கையை அடகு வைத்துவிட்டு எப்போது? எங்கே? எப்படி? நிம்மதியாக வாழ்வது... வாழ தெரிந்து கொள்வோம், வாழ்க்கையின் நுட்பங்களை, இயற்கை உண்மைகளை, உளவியல் விஞ்ஞானமாக உணர்ந்து கொள்வோம்.
💦 *இன்றைய பண்புப்பயிற்சி*
💦 சரியானதொரு மனப்பயிற்சி இல்லாமல் மனதினுடைய பலதரப்பட்ட உண்மைகளை, ஆய்வு செய்து அனுபவம் ஆக்கிக் கொள்ள இயலாது. உயிரையும் உடலையும் ஆய்வு செய்ய அதன் மர்மங்களை உணர்ந்துகொள்ள, மனப்பக்குவத்தை அடைந்தால் மட்டுமே சாத்தியம். மனப் பயிற்சியில் இணைந்து கொண்டு, உயர்ந்த தரத்திலும் தன்மையிலும் வாழ்ந்து, வாழவைத்து வாழ்வோம்... வாழ்க வளமுடன்...
💦 *இன்றைய மூலிகை*
💦 *அருகம்புல் பானம்* ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.
💦 அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும்.
💦 இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.
💦 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
💦 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
💦 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
💦 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment