♦️♾️♦️♾️♦️♾️♦️♾️♦️♾️♦️
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*மே 14*
♦️♾️♦️♾️♦️♾️♦️♾️♦️♾️♦️
🔘 *இன்றைய நித்தியகடன்*
🔘 அதிகாலை எழுந்து நிதானமாக, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🔘 *இன்றைய சாதகம்*
🔘 வெள்ளிகிழமை
காலை, மாலை இரண்டு
வேளையும் சாந்தி தவம்.
🔘 *இன்றைய நற்சிந்தனை*
🔘 இந்த உலகில் நடைபெறக்கூடிய இந்த சம்பவத்திற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, என்று எந்த ஒரு தனிநபரும் நினைக்கலாம். ஆனால் அது உண்மையல்ல. அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஒவ்வொரு தனிமனிதரும் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புடையவர்களே. பிரபஞ்ச காந்த இயக்கத்தின் அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இருக்கிறோம். ஒருவரோடு ஒருவர் காந்தத்தின் மூலம் தொடர்பு படுத்தப்பட்டு இருக்கிறோம். மனிதர்கள் ஒவ்வொரு வரும் உடலளவில் தனியாக இருக்கிறார்களெதவிர, அவர்கள் அனைவரும் காந்தத்தால் ஒருங்கிணைக்கப்பட்டு தான் இயங்குகிறார்கள்.
🔘 *இன்றைய தற்சோதனை*
🔘 நன்மையாக இருந்தாலும் தீமையாக இருந்தாலும், நாம் ஒன்றை எண்ணி விட்டோமே ஆனால், அது இந்த பிரபஞ்ச வான்காந்த களத்தில் பதிவு பெறுகிறது. இந்த பதிவானது செயல்படுவதற்கு, உரிய காலத்தை உரிய நபரை எதிர்நோக்கி காத்திருக்கும். நன்மையும், தீமையும் இவ்வுலகில் நடைபெறுவதற்கு ஒவ்வொரு, மனிதர்களுடைய எண்ண பதிவும் தூண்டுதலாக அமைகிறது. இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் பொறுப்பும் கடமையும் அதிகம் இருக்கிறது. விளையாட்டாக எதையும் எண்ணி விடவும் கூடாது, செயலை செய்து விடவும் கூடாது.
🔘 *இன்றைய பண்புப்பயிற்சி*
🔘 மேலே கூறப்பட்டு இருக்கக்கூடிய அனைத்து உண்மைகளையும், அவரவர்கள் உணர்ந்து கொள்வதற்கு மனப் பயிற்சியில் தங்களை தாங்களே, ஆர்வத்தோடு ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்த ஆர்வம் ஒன்று தான் தன்னுடைய பொறுப்பையும், இந்த பிரபஞ்ச ரகசியங்களையும் தெளிவாக அவர்களுக்குள் அனுபவமாகவே உணரச்செய்யும். அத்தகைய சிறப்புமிக்க பயிற்சியே மனவளக்கலையாகும். "நான் எனது வாழ்நாளில், யாருடைய உடலுக்கும், மனதுக்கும், துன்பம் தரமாட்டேன். துன்பப் படுவோருக்கு என்னால் முடிந்த உதவியை செய்வேன்". வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!...
🔘 *இன்றைய மூலிகை*
🔘 *நிலவேம்பு குடிநீர்* தேவையான பொருள் தண்ணீர் -200ml
நலவேம்பு ஒரு டேபில் ஸ்பூன்.
🔘 செய்முறை:- நிலவேம்பு ஒரு டேபில் ஸ்பூனை. 200ml தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும் 100ml ஆகும் அளவிற்கு கொதிக்க விடவும்.
🔘 *முக்கிய குறிப்பு:-* காலையில் தயாரித்து. காலை வெறும்
வயிற்றில் பருகவும். மூன்று வயது குழந்தைகளுக்கு 50ml பெரியவர்களுக்கு 100ml
நோய் எதிர்புசக்தி அதிகரிக்கும்.
(வைரஸ் காய்ச்சல் குணமாகும்)
🔘 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🔘 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🔘 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🔘 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment