💢🔷💢🔷💢🔷💢🔷💢🔷💢
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*மே 12*
💢🔷💢🔷💢🔷💢🔷💢🔷💢
🎑 *இன்றைய நித்தியகடன்*
🎑 அதிகாலை எழுந்து நிதானமாக, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🎑 *இன்றைய சாதகம்*
🎑 புதன்கிழமை
காலை:- தீபப்பயிற்சி,
ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🎑 *இன்றைய நற்சிந்தனை*
🎑 கர்மயோக நெறிமுறைக்கும் உலகியல் வாழ்க்கைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. நாம் கர்ம யோக நெறி முறைப்படி வாழ்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. இந்த உலகில் யாருமே கர்மயோக நெறி முறைகளை பின்பற்றுவது இல்லை. பொய், சூது, களவு, வஞ்சம் இப்படி வாழ்வது தான் வாழ்க்கை என்று, அனைவரும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அனைவருக்கும் கற்றுக் கொடுக்கிறார்கள். இந்த இன்னல்களுக்கும் இடர்பாடுகளுக்கும், இடையில் கர்ம யோகத்தை நான் எப்படி கடைபிடிப்பது...
🎑 *இன்றைய தற்சோதனை*
🎑 இன்றைய உலகியல் வாழ்க்கையில் நாம் ஒன்றை தெளிவான கண்ணோட்டத்தோடு புரிந்து கொள்ள வேண்டும். கர்ம யோக நெறிமுறைகளை கடைபிடிப்பதற்காக நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம். அடுத்தவர்கள் அதை கடைப்பிடிக்கிறார்களா?, என்று ஆராய்வதற்காக நாம் இவைகளை தெரிந்து கொள்ளவில்லை. வாழ்க்கை என்பது எல்லா மக்களுக்கும் ஒரே மாதிரியானது. யாருக்காகவும் அது தன்னை மாற்றி அமைத்து கொள்வது இல்லை. மற்றவர்கள் அனைவரும் கர்மயோக நெறிகளை பின்பற்றாததற்கு காரணம், அவர்களுக்கு அதைப் பற்றி எதுவுமே தெரியாது.
🎑 *இன்றைய பண்புப்பயிற்சி*
🎑 இன்றைக்கு நாம் இந்த கர்மயோக நெறிமுறைகளை தெரிந்து கொண்டோம் கடைபிடிப்போம். நாளை அவர்கள் தெரிந்து கொள்வார்கள் கடைபிடிப்பார்கள். அதற்கான முன்னோட்டமாக நாம் இன்று அவர்களுக்கு வாழ்ந்து காட்டுவோம். வாழ்க்கையின் உட்கூறு அமைப்புகள் அனைத்தும் இறைவனால் வடிவமைக்கப்பட்டது. அந்த இயற்கையினுடைய புனிதம் எப்போதும் எங்கேயும் நிலை குலைவது கிடையாது. ஆக நாம் இன்று சென்று இருக்கும் இடத்திற்கு, நாளை அவர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையோடு, கர்மயோக நெறிமுறைகளை கடைபிடிப்போம், கடை தேறுவோம். வாழ்க வளமுடன்...
🎑 *இன்றைய மூலிகை*
🎑 *செம்பருத்தி* இரண்டு செம்பருத்தி பூ
(மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
🎑 இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.
🎑 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🎑 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🎑 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🎑 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment