நித்தியகடன் மே 11 2021

🔶🌀🔶🌀🔶🌀🔶🌀🔶🌀🔶

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*மே 11*

🔶🌀🔶🌀🔶🌀🔶🌀🔶🌀🔶

♨️ *இன்றைய நித்தியகடன்*

♨️ அதிகாலை எழுந்து நிதானமாக, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

♨️ *இன்றைய சாதகம்*

♨️ செவ்வாய்க்கிழமை இன்று அமாவாசை காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம்.
 
♨️ *இன்றைய நற்சிந்தனை*

♨️ வெந்நீர் கொதி நிலையை அடைவதற்கு 100 டிகிரி வெப்பம் தேவைப்படுகிறது. அரிசியை வேகவைப்பதற்கும், பாலை காய்ச்சுவதற்கும் அதற்கு தகுந்த வெப்பநிலை தேவைப்படுகிறது. இவ்வாறாக ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு வெப்பநிலை தேவைப்படுகிறது. இது போலவே உயிரில் உள்ள விலங்கின பதிவை ( கலங்கத்தை) அகற்ற அதற்குத் தகுந்த வெப்ப நிலை தேவைப்படுகிறது.

♨️ *இன்றைய தற்சோதனை*

♨️ உடல்பயிற்சி, காயக்கல்பம், தவம் இவைகளை செய்யும்போது உங்களுடைய உடலில், உயிரில் ஒரு வெப்பம் உருவாகும். இந்த வெப்பம் விலங்கினப் பதிவுகளை அகற்றக்கூடிய ஞான வெப்பமாகும். இந்த வெப்பத்தை உருவாக்கி கொண்டு விலங்கின பதிவை படிப்படியாக உயிரிலிருந்து அகற்றி கொள்வோம். இந்த விஞ்ஞானத்தை எல்லாவகையிலும் தற்சோதனை செய்யுங்கள் "சொல்லால் மட்டும் நம்பாதீர் சுயமாய்ச் சிந்தித்தே தெளிவீர்களாக"

♨️ *இன்றைய பண்புப் பயிற்சி*

♨️ ஆராய்ச்சியையும், தற்சோதனையையும் அவரவருக்குள்ளிருந்து துவங்குங்குவோம். அதுதான் சரியான துவக்கமாக சரியான இலக்கை அடையக்கூடிய செயலாக அமையும். நீங்கள் தொடர்பு கொள்ளும் பொருள், இடம், காலம், நோக்கம், திறமை போன்ற அனைத்திற்கும் அதற்கு தக்கவாறு விளைவு நிச்சயம் உண்டு. இறைத் தன்மை பெருகும் செயல் பண்புகளை வளர்த்துக் கொண்டு நலமான வாழ்வை, வளமாக வாழ்வோம். வாழ்க வளமுடன்...

♨️ *இன்றைய மூலிகை*

♨️ *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.

♨️ இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும். 

♨️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

♨️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

♨️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

♨️ *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments