நித்தியகடன் மே 10 2021

🥝🏮🥝🏮🥝🏮🥝🏮🥝🏮🥝

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*மே 10*

🥝🏮🥝🏮🥝🏮🥝🏮🥝🏮🥝

🌏 *இன்றைய நித்தியகடன்*

🌏 அதிகாலை எழுந்து நிதானமாக, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🌏 *இன்றைய சாதகம்*

🌏 திங்கட்கிழமை 
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 
மாலை:- நித்யானந்த தவம்.
 
🌏 *இன்றைய நற்சிந்தனை*

🌏 இந்த பூமியில் உள்ள எல்லா உயிர் வகைகளுக்கும், பூமியின் எல்லாவிதமான தன்மைகளுக்கும், நேரடியாகவும் மறைமுகமாகவும் நெருங்கிய தொடர்பு உண்டு. பூமியின் தற்சுழற்சி வேகம் சூரியனை சுற்றி வரும் போது ஏற்படும் பருவகால மாற்றம் நிலத்தின் அளவு, நீரின் அளவு, வெப்பத்தின் அளவு, காற்றின் அளவு என்று ஆய்வு செய்து பார்த்தால் எல்லாமும் 100% பொருத்தமானதாகவே இருக்கும். இவ்வளவு சிறப்பான பூமியில் நாம் ஏன் நோய்களோடும் துன்பங்களோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த பூமிக்கும் நமக்குமான இயற்கை உறவை, ஏதோ ஒன்று இடைமறித்து திசைமாற்றி கொண்டிருக்கிறது அது என்ன?

🌏 *இன்றைய தற்சோதனை*

🌏 அணு கூட்டின் தன்மையிலும், பஞ்சபூதங்களின் அளவு முறையிலும், நாம் இந்த பூமியோடு ஒத்துப் போகிறோம். ஆனால் மனதளவிலும் உயிரளவிலும் பூமிக்கும் நமக்குமான இடைவெளி மிகவும் பெரியது. மனதளவிலும் உயிரளவிலும் இந்த பிரபஞ்சத்திற்கும் நமக்குமான இடைவெளி மிகவும் பெரியது. இந்த இடைவெளியை உருவாக்கி அந்த இடத்தை ஆக்கிரமித்து வாழ்ந்து கொண்டிருப்பது விலங்கினப் பதிவு. இந்த இடைவெளியை யார் குறைத்துக் கொள்கிறாரோ அவருக்கு நோய்கள் கிடையாது. வாழ்க்கை என்பது வெறும் உடல் சார்ந்தது மட்டுமல்ல மனம் சார்ந்தது. மனமும் உடலும் இயங்குவதற்கான அடிப்படை ஆதாரமாக உள்ள உயிர் சார்ந்தது. தற்சோதனை செய்து உணர்வோம்...

🌏 *இன்றைய பண்புப்பயிற்சி*

🌏 இறைவனை உணர்ந்து கொள்வதற்கான இந்த வாழ்க்கைப் பயணத்தில் உடல், உயிர், மனம் இவை அனைத்தையும் தூய்மை செய்து கொண்டு, அந்த நிலையில் நின்று வாழும்போது மட்டும்தான் இறைநிலையை உணர்வதற்கான தகுதி உருவாகிறது. உடல்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இவைகளில் நம்மை அனுதினம் ஈடுபடுத்திக் கொள்ளும் போது இறைநிலையை உணர்வதற்கான தகுதி நாளுக்கு நாள் உயரும். நாள் தவறாமல் பயிற்சி செய்யும் பண்பில், நம்மை ஆழமாக இணைத்துக் கொள்வோம். வாழ்க வளமுடன்...

🌏 *இன்றைய மூலிகை*

🌏 *அருகம்புல் பானம்* ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.

🌏 அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். 

🌏 இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.

🌏 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🌏 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🌏 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🌏 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments