🍀🌹🍀🌹🍀🌹🍀🌹🍀🌹🍀
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*மே 09*
🍀🌹🍀🌹🍀🌹🍀🌹🍀🌹🍀
👣 *இன்றைய நித்தியகடன்*
👣 அதிகாலை எழுந்து நிதானமாக, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
👣 *இன்றைய சாதகம்*
👣 ஞாயிற்றுகிழமை
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம்
மாலை:- இறைநிலை தவம்.
👣 *இன்றைய நற்சிந்தனை*
👣 அன்றன்று சேரக்கூடிய அழுக்கினை, கலங்கத்தினை அன்றன்றே சுத்தம் செய்வோம். நாம் உபயோகப்படுத்தும் பாத்திரத்தையோ, வாகனத்தையோ சுத்தமாக அன்றன்று துடைத்து கழுவி தூய்மையாக வைத்துக் கொண்டால் தான், அதனை அடுத்தடுத்த நாட்களுக்கு சிறந்த முறையில் பயன்படுத்த முடியும்.
👣 *இன்றைய தற்சோதனை*
👣 இது போன்றே இந்த பருவுடலும், நுண்ணுடலும், காந்தவுடலுமாகும். இவைகளில் கலங்கத்தை, கசடுகளை, அழுக்கை சேரவிடாதீர்கள். அப்படி விட்டு விட்டோமானால், அதிலிருந்து நாம் பெறுவது உடலில் நோய், மனதில் குழப்பம், வாழ்க்கையில் சிக்கல், இவைகளை தவிர்ப்பதற்க்கு அன்புகூர்ந்து தற்சோதனை செய்து அன்றன்று சுத்தம் செய்வீர், ஞான தேகம் செய்வீர்.
👣 *இன்றைய பண்புப் பயிற்சி*
👣 காலையில் செய்ய வேண்டிய பயிற்சி முறைகளையும், மாலையில் செய்ய வேண்டிய பயிற்சி முறைகளையும் செய்துவிட்டால் போதும். உயிரின் மீதும், காந்தத்தின் மீதும், உடல் செல்கள் மீதும் ஏற்பட்டிருக்கும் அழுக்கு நீக்கப்பட்டுவிடும். அன்றன்று செய்யும் பயிற்சியை அன்றன்றே செய்யும் பண்பில் உயர்வோம். காலம் யாருக்காகவும் காத்திருக்காது. இதற்கு யாரும், எவரும் விதிவிலக்கு அல்ல. வாழ்க வளமுடன்...
👣 *இன்றைய மூலிகை*
👣 *துளசி* தேவையான பொருட்கள்
துளசி இலை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
நாட்டு சர்கரை – தேவையான அளவு
👣 *செய்முறை*
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். துளசி தேநீரைதயார்.
👣 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
👣 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
👣 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
👣 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment