நித்தியகடன் மே 06 2021

🌿🍒🌿🍒🌿🍒🌿🍒🌿🍒🌿

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*மே 06*

🌿🍒🌿🍒🌿🍒🌿🍒🌿🍒🌿

🌀 *இன்றைய நித்தியகடன்*

🌀 அதிகாலை எழுந்து நிதானமாக, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🌀 *இன்றைய சாதகம்*

🌀 வியாழக்கிழமை 
காலை:- துரியதவம், 
மாலை:- இறைநிலைதவம்.
 
🌀 *இன்றைய நற்சிந்தனை*

🌀அவரவர் எண்ணங்களை, அவரவர் பேச்சுக்களை, அவரவர் செயல்களை, அவர் அவர்களிடமே விட்டு விடுங்கள். எவரொருவர் எண்ணமும், சொல்லும், செயலும் நம் வாழ்வை தீர்மானிக்கப் போவது கிடையாது. மாறாக அவற்றில் உள்ள நன்மைகளை மட்டும் நம்முடைய அறிவு மேன்மைக்கும், உயிர் தூய்மைக்கும், பயன்படுத்தி பயன் காண்போம். மற்றவர்களுடைய எதிர்மறையான எண்ணங்களாலும், பிழையான செயல்களாலும், ஒழுங்கற்ற பேச்சினாலும் நம் வாழ்க்கை தீர்மானிக்கப் போவது இல்லை.  

🌀 *இன்றைய தற்சோதனை*

🌀 உயிர் தூய்மைக்காகவும், மனத் தூய்மைக்காகவும் இயற்கையினுடைய கோட்பாட்டை ஒப்பிட்டு அதனுடைய வேறுபாடுகளை உணர்ந்து கொள்ளலாம். இந்த இடத்தில் ஒப்பிடுதல் என்பது தவறு கிடையாது. ஆனால் மனிதர்களுக்கிடையே ஒருவருக்கு ஒருவரை ஒப்பிட்டுப் பார்த்து உயர்த்திக் கொள்வதும், தாழ்த்திக் கொள்வதும் மனித சிந்தனைக்கோ, கருமையத்துக்கோ பொருந்தாததாகும். தற்சோதனை செய்து தனித்துவமான நீங்கள் நீங்களாகவே வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள்.

🌀 *இன்றைய பண்புப் பயிற்சி*

🌀 எவரொருவர்க்காகவும் உங்களுடைய தனித்தன்மையை தனித்துவத்தை இழந்து விடாதீர்கள். இன்பத்திலும், துன்பத்திலும், உங்களோடு இருந்து உங்களுடைய நினைவுகளாக நீடித்து நிலைத்து கொண்டிருப்பது, இறை பேராற்றல் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். உங்களிடமிருந்து துவங்கட்டும் நல்வகையான மாற்றங்கள் இந்த உலகிற்கு பரவட்டும், ஞான ஒளி வீசட்டும். நம்மை நாம் தக்க வைத்துக் கொள்ளும் பண்பில் உயர்வோம். எல்லையற்ற இறை வெளியோடு எண்ணத்தை கலக்கவிட்டு மனநிறைவோடு வாழ்வோம். வாழ்க வளமுடன்...

🌀 *இன்றைய மூலிகை*

🌀 *கருஞ்சீரகம்* தேவேயான பொருள் கருஞ்சீரகம் – 50gm, 
வெந்தயம் – 250gm,
ஓமம் – 100gm

🌀 மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனித்தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும். இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்,இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.

🌀 தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது. தேவையான கொழுப்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது, இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.

🌀 நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது, மலச்சிக்கல் நீங்குகிறது, 
பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது. மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது, ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது. நீரிழிவு நோய் கட்டுக்குள் வைக்க படுகிறது. 

🌀 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🌀 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🌀 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🌀 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments