🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*மே 04*
🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶
🏮 *இன்றைய நித்தியகடன்*
🏮 அதிகாலை எழுந்து நிதானமாக, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🏮 *இன்றைய சாதகம்*
🏮 செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
🏮 *இன்றைய நற்சிந்தனை*
🏮 "சட்டம் தன் கடமையை செய்யும்" இந்த வாசகம் மனிதனுடைய சட்டம் கிடையாது, இறைவனுடைய சட்டம். இறைநீதி எந்த இடத்திலும் எந்த ஒரு சூழ்நிலையிலும் தன்னுடைய நீதியை மாற்றிக் கொண்டதாகவோ, அல்லது நீதியை கொன்றுவிட்டதாகவோ வரலாறு கிடையாது. இறைவனின் தன்மாற்ற சரித்திரத்தில் எந்த ஒரு இடத்திலும், இந்தப் பிழை நிகழ்ந்தது கிடையாது, இனி நிகழப் போவதும் கிடையாது. சட்டம் தன் கடமையை செய்யும்
🏮 *இன்றைய தற்சோதனை*
🏮 தனக்கோ பிறருக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ, மனதிற்கோ, தன்னுடைய எண்ணம், சொல், செயல் இவை வழியாக துன்ப நிகழ்வுகளை ஏற்படுத்திக்கொள்ளாமல் வாழ்வதே இறைநீதியாகும். இறைவனுடைய இந்த சட்டத்தை எவரெல்லாம் மதிக்கிறார்களோ, ஒத்தும் உதவியுமாக யாரெல்லாம் வாழ்கிறார்களோ, அவர்களுக் கெல்லாம் வாழ்க்கை நிறைவானதாகவும்,அமைதி உடையதாகவும் அமைகிறது. இதனை தற்சோதனை செய்து புரிந்து கொள்வது மட்டும்தான் மனிதர்களுடைய கடமையாகும்.
🏮 *இன்றைய பண்புப் பயிற்சி*
🏮 இந்த பிரபஞ்சத்திலும்,நமது உடலிலும்,103 மூலகங்கள் (elements) உள்ளன.இந்த அனைத்து மூலகங்களோடும் சரியான நுட்பத்தோடும் இணைந்து, இயங்கக்கூடிய பண்பு தான் மனிதனுடைய சிறப்பான பண்பாகும். இந்த சிறப்பு மிக்கபண்பு மனிதனுக்குள் உள்ளடங்கி இருக்கிறது. இதனை முறையான பயிற்சி மூலம் நம்முள் இருந்து சரியான அளவு முறையில் வெளிப்படுத்திக் கொள்ள முடியும். வாழ்க வளமுடன்..!
🏮 *இன்றைய மூலிகை*
🏮 *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
🏮 இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும்.
🏮 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🏮 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🏮 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🏮 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment