🎛️🔮🎛️🔮🎛️🔮🎛️🔮🎛️🔮🎛️
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*மே 03*
🎛️🔮🎛️🔮🎛️🔮🎛️🔮🎛️🔮🎛️
🗾 *இன்றைய நித்தியகடன்*
🗾 அதிகாலை எழுந்து நிதானமாக, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🗾 *இன்றைய சாதகம்*
🗾 திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
🗾 *இன்றைய நற்சிந்தனை*
🗾 முகாந்திரங்கள் (ஆதாரம்) இல்லாமல் எதுவுமே கிடையாது. சரியாக முயற்சி செய்தால் எல்லா முகந்திரங்களையும் (ஆதாரம்) நம்மால் வெளிச்சத்துக்கு கொண்டுவர முடியும். இருட்டுக்குள் இருக்கும் வரை உங்களுடைய நிழல் உங்களுக்கு தெரியாது. வெளிச்சத்தில் பயணம் செய்யுங்கள், வெளிப்படையான வாழ்க்கை பயணத்தை உங்களுக்குள்ளாக துவங்குங்கள். காலம் யாருக்காகவும் காத்திருக்காது என்ற சிந்தனையை ஆழமாக விதைத்து கொள்ளுங்கள். நாம் ஏன் வாழ்கிறோம்? எதற்காக வாழ்கிறோம்? நம்முடைய வாழ்க்கையின் அடிப்படை கோட்பாடுதான் என்ன?...
🗾 *இன்றைய தற்சோதனை*
🗾 நம்முடைய எண்ணம், சொல், செயல் அனைத்திற்கும் முகாந்திரம் (ஆதாரம்) இருக்கிறது. சரியான மனநிலையில் இருந்து முகாந்திரங்களை சேகரித்து கொண்டு, தக்க முறையில் முயற்சி செய்தால் நம்மால் அவைகளை சரியாக இனம் கண்டு கொள்ள முடியும். நாம் எங்கே இருக்கிறோம்? எதன் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? நம்மை எது வழிநடத்துகிறது? அந்த ஒரு பெரும் சக்தியை உணர்ந்து கொள்வதற்கு விடாமுயற்சி வேண்டும் மேலும் அதற்கு விருப்பு-வெறுப்பு இல்லாது முயற்சி செய்தால்தான் இதில் முழு வெற்றியை நாம் பெறமுடியும்.
🗾 *இன்றைய பண்புப்பயிற்சி*
🗾 விருப்பு-வெறுப்பு இல்லாது எப்போதும் சிந்தித்து வாழும் ஞானஜோதிதனை உங்களுக்குள் ஏற்றிக்கொள்ளுங்கள். கேள்விகள் கேட்கப்படும் போதுதான் அதற்கு உரிய பதில்கள் வாசிக்கப்படும். எந்த இடத்தில் இருந்து நாம் எதை கேட்க வேண்டும், எந்த இடத்தில் இருந்து நாம் எதை பெற வேண்டும், என்று இயற்கை சட்டம் ஒன்று இருக்கிறது. இந்த சட்ட விதிமுறைகள் யாருக்காகவும் எப்போதும் எங்கேயும் மாறுவதில்லை. நமக்கு ஏற்றார்போல அதை இப்படியும் அப்படியுமாக மாற்றி அமைக்கவும் முடியாது. அது யாவர்க்கும் பொதுவாய் இயங்கும் இறைநீதி. வாழ்க வளமுடன்...
🗾 *இன்றைய மூலிகை*
🗾 *துளசி* தேவையான பொருட்கள்
துளசி இலை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
நாட்டு சர்கரை – தேவையான அளவு
🗾 *செய்முறை*
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். துளசி தேநீரைதயார்.
🗾 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🗾 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🗾 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🗾 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment