🔥🌸🔥🌸🔥🌸🔥🌸🔥🌸🔥
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*மே 02*
🔥🌸🔥🌸🔥🌸🔥🌸🔥🌸🔥
⏹️ *இன்றைய நித்தியகடன்*
⏹️ அதிகாலை எழுந்து நிதானமாக, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
⏹️ *இன்றைய சாதகம்*
⏹️ ஞாயிற்றுகிழமை
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம்
மாலை:- இறைநிலை தவம்.
⏹️ *இன்றைய நற்சிந்தனை*
⏹️ மனிதர்களுக்குள் ஞானம் விதைக்கப்பட்டிருக்கிறது. இந்த விதையை வளர்ப்பதற்க்கு சரியான செயல் மட்டுமே தேவைப்படுகிறது. எல்லா மனிதர்களுக்குள்ளும் ஞானம் வளர்வதற்கான அடிப்படை தகுதி முழுமையாக இருக்கிறது. ஒரு விதை முளைப்பதற்கு பக்குவமான நிலம், நீர், வெப்பம், காற்று இவை அனைத்தும் தேவைப்படுகிறது. இவையெல்லாம் சரியான விகிதாச்சாரத்தில் ஒன்று சேரும்போது ஒரு விதை முளைக்கிறது. இந்த ஞானத்தை எல்லோரும் சரியான செயல்கள் மூலம் முளைக்கச் செய்து கொள்ள முடியும். ஞானம் என்பது ஒரு விளைவு, இந்த விளைவை சரியான செயல் மூலம் வளர்த்துக் கொள்ள முடியும். அந்த சரியான செயல், வேறு ஒன்றுமல்ல...
⏹️ *இன்றைய தற்சோதனை*
⏹️ தான் துன்பப்படமலும் பிறரை துன்பப்படுத்தாமலுமாகும். "அதிகம் உண்பவர், அல்லது உண்ணாமையே இருப்பவர். அதிகம் உறங்குபவர், அல்லது உறங்காமலேயே இருப்பவர் இவர்களுக்கெல்லாம் இந்த குண்டலினி யோகமும், ஞானமும் சாத்தியம் கிடையாது. ஞானத்தை வளர்த்துக்கொள்ள தடையாக இருப்பதெல்லாம் எதிர்மறை எண்ணங்கள், சொற்கள், செயல்கள் ஆகும். இவைகளை ஒழுங்கு செய்தால் போதும் ஞானம் என்ற விதை இயல்பாகவே, தானாகவே அவர்களுக்குள் முளைக்கத் தொடங்கிவிடும். உங்களை, நீங்களே கண்காணியுங்கள், கவனத்துடன், விளிப்பு நிலையுடன் இருந்து உங்களை, நீங்களே ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய எல்லா சூழ்நிலைகளையும், தற்சோதனை செய்து தகுதியை தக்கவைத்துக் கொள்ளுங்கள். தன்னிறைவு பெறுங்கள்.
⏹️ *இன்றைய பண்புப் பயிற்சி*
⏹️ தேசம், மொழி இவைகளை கடந்து எப்படிப்பட்ட சூழலில் இருந்தாலும், உங்களுடைய தகுதியை மட்டும் இழந்துவிடாமல் இருந்தால் போதும். இந்த தகுதி ஒன்றுதான் மனிதனுக்குள் ஞானத்தை உய்விக்கும் உயர்ந்த உந்துசக்தியாக செயல்புரிகிறது. இந்த தகுதியோடு வாழக்கூடிய பண்பை சிறுக, சிறுக நாளுக்குநாள் உயர்த்தி கொள்வோம். எல்லா வகையிலும், எல்லா நிலையிலும் ஞானம் நமதே. வாழ்க வளமுடன்...
⏹️ *இன்றைய மூலிகை*
⏹️ *அருகம்புல் பானம்* ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.
⏹️ அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும்.
⏹️ இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.
⏹️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
⏹️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
⏹️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
⏹️ *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment