💢🔷💢🔷💢🔷💢🔷💢🔷💢
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஏப்ரல் 30*
💢🔷💢🔷💢🔷💢🔷💢🔷💢
💦 *இன்றைய நித்தியகடன்*
💦 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
💦 *இன்றைய சாதகம்*
💦 வெள்ளிகிழமை
காலை, மாலை இரண்டு
வேளையும் சாந்தி தவம்.
💦 *இன்றைய நற்சிந்தனை*
💦 நீர் எப்படி இருந்தாலும் அது சேருகின்ற பொருளை பொறுத்து அதனுடைய தரமும், தன்மையும் மாறுகிறது. மேகங்களிலிருந்து மழையாக பொழிந்து, மலைக்காடுகளில் விழுந்து, மூலிகையோடு கலந்து, புனிதமான நதியாக பயணம் செய்கிறது. எல்லா உயிரினங்களுக்கும் நீரின் தேவை இருக்கிறது.
💦 *இன்றைய தற்சோதனை*
💦 மூலிகையாகவும், ரசாயனங்களாகவும், ரத்தமாகவும், நதியாகவும், கடலாகவும், மழையாகவும் இருப்பது நீரே. இவை அனைத்தும் நீரின் பல்வேறுபட்ட வெளிப்பாடுகளே. இவ்வாறாக இருக்கும் நீரின் மதிப்பை மனவிரிவு கொண்டு மதித்து போற்றுவோம். அதன் உற்பத்தி இரகசியத்தை உணர்ந்து கொள்வோம். நீரினாலும், நீரிலிருந்தும், இரவும், பகலும் எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும், எல்லாத் தொழில்களிலும் காப்பு பெறுவோம். நீரை பயனுள்ள முறையில் பயன்படுத்திக் கொள்ளத் தக்க விஞ்ஞானத்தை வளர்த்துக் கொள்வோம். இவை அனைத்திலும் உள்ள விஞ்ஞானத்தை தற்சோதனை செய்து உணர்ந்து கொள்வோம்.
💦 *இன்றைய பண்புப் பயிற்சி*
💦 நீரே பிரபஞ்ச தன்மாற்றத்தில் பல்வேறு நிலையாக இருக்கிறது. இது போன்றே மற்ற நான்கு பௌதிக தத்துவங்களும் அமைந்திருக்கிறது. இந்த பௌதீக இயக்கங்களே முழுமையாக ஒருங்கிணைந்து கொண்டு மிகச்சிறந்த கோட்பாடாக மனிதனின் உள்ளும், புறமும் இயங்குகிறது. இவை அனைத்தையும் மனதில், உயிரில் உணரக்கூடிய பண்பை வளர்த்துக் கொள்வோம். எல்லாவற்றையும் ஆராய்ச்சி செய்து உள்ளதை உள்ளவாறு உணர்ந்து கொள்ளும் இப்பண்பே மனிதனை மனிதனாக்கும் பண்பு. வாழ்க வளமுடன்...
💦 *இன்றைய மூலிகை*
💦 *நிலவேம்பு குடிநீர்* தேவையான பொருள் தண்ணீர் -200ml
நலவேம்பு ஒரு டேபில் ஸ்பூன்.
💦 செய்முறை:- நிலவேம்பு ஒரு டேபில் ஸ்பூனை. 200ml தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும் 100ml ஆகும் அளவிற்கு கொதிக்க விடவும்.
💦 *முக்கிய குறிப்பு:-* காலையில் தயாரித்து. காலை வெறும்
வயிற்றில் பருகவும். மூன்று வயது குழந்தைகளுக்கு 50ml பெரியவர்களுக்கு 100ml
நோய் எதிர்புசக்தி அதிகரிக்கும்.
(வைரஸ் காய்ச்சல் குணமாகும்)
💦 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
💦 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
💦 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
💦 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment