நித்தியகடன் ஏப்ரல் 29 2021

❄️🍁❄️🍁❄️🍁❄️🍁❄️🍁❄️

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஏப்ரல் 29*

❄️🍁❄️🍁❄️🍁❄️🍁❄️🍁❄️

💯 *இன்றைய நித்தியகடன்*

💯 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

💯 *இன்றைய சாதகம்*

💯 வியாழக்கிழமை 
காலை:- துரியதவம், 
மாலை:- இறைநிலைதவம்.
 
💯 *இன்றைய நற்சிந்தனை*

💯 உடலையும் உடல் சார்ந்த ரகசியங்களையும் நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். உடல் எதனால் ஆக்கப்பட்டது? இந்த உடல் இயங்குவதற்கான அடிப்படை காரணங்கள் எவை? இவைகளை எல்லாம் தெளிவாக தெரிந்து கொண்டால் தான் இந்த உடலை நடத்துவதில் நமக்கு சிக்கல்கள் இல்லாமலிருக்கும். நம் உடலில் இருக்கக்கூடிய நோயின் தன்மைகள் தனியும் போதும், அதே நோயின் தன்மைகள் அதிகரிக்கும் போதும், இரண்டுக்குமான அறிகுறிகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். வலியில் துவங்கி வலியிலேயே முடிவடையும்...

💯 *இன்றைய தற்சோதனை*

💯 மனப் பயிற்சியில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டு, மனதை பக்குவப்படுத்தி இதே நீதி செயலுக்குத் தக்க விளைவாக அமைந்து இயங்குவதையும், நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். மேலும் பலவிதமான கற்பனைகளை வைத்துக்கொண்டு, இந்த நுட்பமான இயக்க நீதியை நம்மால் உணர முடியாது. கற்பனைகளை எல்லாம் அறவே அகற்றி கொண்டு படிப்படியாக பண்படைவோம். தற்சோதனை செய்வோம். தனித்துவமான இறைநீதியை அதன் இயக்க சிறப்புகளை உணர்வோம்.

💯 *இன்றைய பண்புப்பயிற்சி*

💯 இதனை சீராக நாம் புரிந்து கொள்ள வேண்டுமானால், நமக்குள் இருக்கக்கூடிய உணர்தல், துயித்தல், பிரித்து உணர்தல் இந்த திறமையை நாம் வளர்த்துக் கொண்டோமேயானால், இது நோய்கள் தனியும் அறிகுறியா! அல்லது நோய்கள் பெருகும் அறிகுறியா! என்று புரிந்து கொள்ள முடியும். இந்த அறிவுத்திறனை வளர்த்துக் கொள்வதற்கு அன்றாட பயிற்சி முறைகளை நாம் கட்டாயம் கடைப்பிடித்தே ஆக வேண்டும். வாழ்க வளமுடன்...

💯 *இன்றைய மூலிகை*

💯 *கொத்தமல்லி* ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர் (காய்ச்சி ஆற வைத்தது) இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.

💯 அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும். 

💯 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

💯 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

💯 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

💯 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments