🎲⛳🎲⛳🎲⛳🎲⛳🎲⛳🎲
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஏப்ரல் 27*
🎲⛳🎲⛳🎲⛳🎲⛳🎲⛳🎲
🌀 *இன்றைய நித்தியகடன்*
🌀 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🌀 *இன்றைய சாதகம்*
🌀 செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
🌀 *இன்றைய நற்சிந்தனை*
🌀 குறைகளோடும், குற்றங்களோடும், பிழைகளோடும் தான் நாம் இந்த பூமியில் பிறந்து இருக்கிறோம். இவைகளை நீக்கி கொள்வதற்கான ஒரு சிறப்பான வாய்ப்பு தான் இந்த மனிதபிறவி. பிறந்து வளர்ந்து கொண்டிருக்கும் போது, இன்பங்களுக்கு நம்முடைய அறிவை பழக்கப்படுத்தி விட்ட காரணத்தினால், பிறவியின் நோக்கம் மறந்து போயிற்று. மயக்க உணர்ச்சிகளுக்கு தானும் அடிமையாகி தன்னுடைய சமுதாயத்தையும் அதே முறையில் வளர்த்து குற்றங்களும், குறைகளும், பிழைகளும் நிறைந்த மனித சமுதாயமாக, இன்று உலகம் முழுவதும் விரிந்து பரந்து பிழைத்துக் கொண்டிறோம்.
🌀 *இன்றைய தற்சோதனை*
🌀 மனிதர்கள் இன்னமும் வாழ துவங்கவில்லை. பொருள், புகழ், அதிகாரம், புலனின்பம் இவைகள் வழியாக பிழைத்து கொண்டிருக்கிறார்கள். எண்ணம், சொல், செயல் வழியாக நாட்களை கடத்திக் கொண்டு இருக்கிறார்கள். தன்னுடைய நிலை என்ன? நாம் இந்த பூமிக்கு ஏன் வந்தோம்? உயிர், மனம், அறிவு இந்த மறை பொருள்களெல்லாம் எவ்வாறு இயங்குகிறது? இறைவன் என்றால் யார்? இதையெல்லாம் தெரிந்து கொள்ளும் விதத்தில் தன்னுடைய எண்ணம், சொல், செயல்களை பயன்படுத்த வேண்டும். அதுவே மனிதன் வாழவேண்டிய முறையாகும்.
🌀 *இன்றைய பண்புப்பயிற்சி*
🌀 வாழத் தெரியாமல் வாழ்ந்து, தானும் துன்பப்பட்டு, பிறரையும் துன்பப்படுத்தி, இதுவே இன்பம் என்று எண்ணி, சிக்கல்களை மேலும் மேலும் மனிதர்கள் அதிகரித்து கொள்கிறார்கள். இந்த வாழத் தெரியாத அறிவின் குறைபாட்டினை போக்கிக் கொண்டு, தன்னுடைய பிறப்புக்கு உகந்த செயல் பண்புகளை வளர்த்துக் கொண்டு, இந்த பூமி எல்லோருக்கும் சொந்தமானது. எந்த ஒரு தனிமனிதனும் அரசாங்கமும் இதை அழிப்பதற்கும், சொந்தம் கோருவதற்கும் உரிமை இல்லை என்ற சிந்தனையில் நம்மை எல்லா வகையிலும் உயர்த்திக்கொண்டு, நமக்கான வாழ்வை நாம் வாழ துவங்குவோம். வாழ்க வளமுடன்...
🌀 *இன்றைய மூலிகை*
🌀 *இஞ்சி + சின்ன வெங்காயம் + நீராவி பிடித்தல்*
🌀 இஞ்சி 15 கிராம்
தண்ணீர் 30ml
தேன் ஒரு டீஸ்பூன்
🌀 செய்முறை:- இஞ்சியை நன்றாக அரைத்து தண்ணீர் கலந்து அதில் உள்ள சுண்ணாம்பு படிந்த பின் தெளிந்த சாறை மட்டும் எடுத்துக் கொள்ளவும், அதனோடு தேன்கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் தினமும்.
🌀 சின்ன வெங்காயம் 15 கிராம்
தண்ணீர் 30ml
தேன் ஒரு டீஸ்பூன்
🌀 செய்முறை:- சின்ன வெங்காயத்தை நன்றாக அரைத்து தண்ணீர் கலந்து சாறு எடுத்துக் கொள்ளவும், அதனோடு தேன்கலந்து மாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் தினமும்.
🌀 நீராவி பிடித்தல்:-
குடிநீர் 1,1/2 லிட்டர்
நன்றாக கொதிக்கவைத்து ஒரு போர்வையை போர்த்தி வாய் வழியாக இழுத்து மூக்கு வழியாகவும். மூக்கு வழியாக இழுத்து வாய் வழியாகவும் மாற்றி மாற்றி நீராவியை இழுத்து விடவும். காலை, மாலை இரண்டு வேளையும் பயன்படுத்தலாம். குறிப்பு:- மினரல் வாட்டர் தவிர்க்கவும்.
🌀 நன்மைகள்:- ஆஸ்மா, நெஞ்சுசளி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, அஜிரணம் என அனைத்தும் குணமாகும், *குறிப்பு:- இஞ்சி சாறும், சின்ன வெங்காயம் சாறும் குழந்தைகளுக்கு 2.5ml போதுமானது*.
🌀 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🌀 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🌀 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🌀 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment