🚥🔶🚥🔶🚥🔶🚥🔶🚥🔶🚥
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஏப்ரல் 26*
🚥🔶🚥🔶🚥🔶🚥🔶🚥🔶🚥
🌝 *இன்றைய நித்தியகடன்*
🌝 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🌝 *இன்றைய சாதகம்*
🌝 இன்று திங்கட்கிழமை பௌர்ணமி காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம்.
🌝 *இன்றைய நற்சிந்தனை*
🌝 இன்று இந்த பூமியில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் ஒன்றே ஒன்றுதான் காரணம். மனிதர்கள் வாழும் முறை எந்த ஒன்றையும் அலட்சியமாக சிந்திப்பது, உடலைப் பற்றிய அக்கறையும் ஆர்வம் இல்லாது இருப்பது, உடலுக்கு தேவையான கடமைகளை செய்யாமல் பொழுது போக்குவது, இந்த உடலை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற அடிப்படை சிந்தனை, செயல், திட்டம் எதுவும் இல்லாமல் தானும் ஏமார்ந்து மற்றவர்களையும் ஏமாற்றும் இந்த துரோகத்தை உடலுக்கு செய்து கொண்டும், மேலும் அதை நியாயப்படுத்திக் கெண்டு வாழும் சிந்தனைப் போக்குமே இதற்கெல்லாம் மூல காரணம்...
🌝️ *இன்றைய தற்சோதனை*
🌝️ வரட்டும் பார்த்துக் கொள்ளலாம், இப்போது அதற்கு என்ன அவசியம், உடற்பயிற்சி தினமும் செய்துதான் ஆக வேண்டுமா? நான் நன்றாகவே இருக்கிறேன், எனக்கு எந்த நோயும் கிடையாது, நான் ஏன் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்? இந்த வயதில் நான் இதை எல்லாம் சாப்பிடாமல், பின் எந்த வயதில் நான் சாப்பிடுவது. கண்ணால் காண்கின்ற அனைத்தையும் உணவாக உட்கொண்டு, பின் ஏதேனும் தொந்தரவுகள் வருமேயானால் அதற்கென அப்போதைக்கு மருந்துகளை எடுத்துக்கொள்வது, உணவில் ஒழுங்கு இல்லாமல் வாழ்ந்து பழகி பூமி மீது திரிந்து கொண்டிருக்கும், முறை தவறிய செயல்கள் தான் உலக துன்பங்களுக்கெல்லாம் மூலகாரணம்.
🌝️ *இன்றைய பண்புப்பயிற்சி*
🌝️ உடல் மீதும் உயிர் மீதும் எவர் ஒருவருக்கு அக்கறை இருக்கிறதோ, அவர்தான் இந்த உலகில் வாழக்கூடிய முழு தகுதியும் உடையவராவார். மற்றவர்கள் அனைவரும் தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள். எவ்வளவு காலம்தான் தப்பித்து தப்பித்து ஓடிக் கொண்டே இருப்பீர்கள். ஓட்டத்தை நிறுத்திவிட்டு வாழ துவங்குங்கள். வாழ்வது என்பது ஒன்றும் அவ்வளவு சிரமமான காரியம் இல்லை. ஓடுவதுதான் சிரமம். சற்று நிதானமாக நின்று உங்கள் மீது அக்கறையோடும் ஆர்வத்தோடும் உடலையும் உயிரையும் பற்றி சிந்தியுங்கள். அதற்கு உண்டான பயிற்சியில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கை அங்கேயே உங்கள் வசமாக மாறிவிடும். வாழ்க வளமுடன்...
🌝 *இன்றைய மூலிகை*
🌝 *அருகம்புல் பானம்* ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.
🌝 அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும்.
🌝 இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.
🌝 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🌝 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🌝 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🌝 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment