நித்தியகடன் ஏப்ரல் 25 2021

🍃✨🍃✨🍃✨🍃✨🍃✨🍃

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஏப்ரல் 25*

🍃✨🍃✨🍃✨🍃✨🍃✨🍃

🌍 *இன்றைய நித்தியகடன்*

🌍 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🌍 *இன்றைய சாதகம்*

🌍 ஞாயிற்றுகிழமை 
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம் 
மாலை:- இறைநிலை தவம்.
 
🌍 *இன்றைய நற்சிந்தனை*

🌍 இந்த பூமியில் உள்ள கண்டங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான தனித்துவம் வாய்ந்தது, ஒவ்வொன்றுக்கும் தன்மைகள் வேறுபடும். அதுபோன்றே நிலப்பரப்பில் வாழக்கூடிய உயிரினங்களுக்கும், தாவரங்களும், மனிதர்களுக்கும் அதே தன்மை மேலோங்கும். இது இயற்கையின் துல்லிய இயக்க சட்டமாகும்‌. இந்த சட்டத்தை இன்னும் கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.

🌍 *இன்றைய தற்சோதனை*

🌍 மண்ணின் தன்மை மாறும் போது மனிதர்களின் தன்மையும் மாறுகிறது. அது அவர்களுடைய கருமைய அமைப்பில் இருந்து உருவாகிறது. எந்த ஒரு மனிதனுடைய கருமையமும் ஒரே மாதிரியான தன்மையில் இருப்பது இல்லை. பொதுவாக கண்டங்களுக்கு ஏற்பவும், அத்தன்மைகளுக்கு ஏற்பவும் நிலப்பரப்பில் உள்ள உயிரினங்களுக்கு தனித்தனியாக, ஒவ்வொரு மனித கருமையத்திலும், அவர்களுடைய தன்மையே வெளிப்படும். எண்ணமாக, சொல்லாக, செயலாக இந்த தன்மைகளை நம்மால் ஒழுங்குபடுத்திக் கொள்ள முடியும். தற்சோதனை, தவம், உடற்பயிற்சி, காயகல்பம் இந்த பயிற்சிகளின் மூலமாக.

🌍 *இன்றைய பண்புப் பயிற்சி*

🌍 கருமையத்தினுடைய தன்மையை மனிதர்களின் சிறப்பான செயல்களால் மாற்றி அமைக்க முடியும். அவர்களுடைய சிந்தனை, செயல்பாடு அறிவு நிலைக்கு ஏற்ப அவர்களுடைய செயல் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த பண்பில் எல்லா மனிதர்களும் உயர்வு பெற வேண்டும். அறிவின் தன்மையை உயர்த்திக் கொண்டு சிந்தனை, சிக்கனம், சீர்திருத்தம் எனும் இப்பண்புகளை எல்லோரிடத்திலும் மேலோங்க வேண்டும்.

🌍 *இன்றைய மூலிகை*

🌍 *துளசி* தேவையான பொருட்கள்
துளசி இலை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
நாட்டு சர்கரை – தேவையான அளவு

🌍 *செய்முறை*
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். துளசி தேநீரைதயார்.

🌍 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🌍 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🌍 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*.

🌍 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments