🎭🍁🎭🍁🎭🍁🎭🍁🎭🍁🎭
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஏப்ரல் 24*
🎭🍁🎭🍁🎭🍁🎭🍁🎭🍁🎭
🎲 *இன்றைய நித்தியகடன்*
🎲 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🎲 *இன்றைய சாதகம்*
🎲 சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
🎲 *இன்றைய நற்சிந்தனை*
🎲 ஒவ்வொரு மனிதர்களுடைய கருமையத்திலும் எவ்வளவு களங்கம் இருக்கிறது, என்பதை நாம் சுலபமாக அறிந்து கொள்ள முடியும். இந்த பூமியில் காற்று, நீர், நிலம் இவற்றில் எந்த அளவு மாசு நிறைந்திருக்கிறதோ, அந்த அளவு மனிதருடைய கருமையமும் களங்கப்பட்டு இருக்கும். மனிதர்களுக்குள் என்ன இருக்கிறதோ, அதுவே அவர்களின் எண்ணம், சொல், செயல் வழியாக வெளிப்படு இந்த பூமியை மாசுபடுத்தி கருதுகிறது. இந்த ஒட்டுமொத்த மனித சமுதாயம் அவர்களுக்குள் இருந்த களங்கம் இவை எல்லாம் வெளிப்பட்டு இவ்வுலகை மாசு நிறைந்ததாக மாற்றிவிட்டது. கருமையம் தூய்மை பெறப் பெற இப்பூமியும் தூய்மை பெறும்.
🎲 *இன்றைய தற்சோதனை*
🎲 எல்லோருக்கும் பொதுவான இந்த பூமியின் வளங்களை மனிதன் தனக்கு மட்டும் என்று எண்ணி, செயல்களை செய்ய துவங்கிய நாள் முதல் கொண்டு இந்த மாசு உருவானது. கருமையமும் களங்கமானது. தனி மனிதர் எவரையும் இனி எவராலும் காப்பாற்ற முடியாது. அவரவர்களை அவர்களே காப்பாற்றி கொள்ள வேண்டியது தான், இப்போது நடந்து கொண்டிருக்கும் உலக நிகழ்ச்சிகளிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டிய உண்மையாக இருக்கிறது. இயற்கையின் பொறுமையை சோதிக்க துவங்கிவிட்டார்கள். மனிதர்கள் இதனுடைய முடிவு இனிமையாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டுமானால், ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னை தற்காத்துக் கொள்ள கூடிய பொறுப்பும் கடமையும் மிக அதிகம்.
🎲 *இன்றைய பண்புப்பயிற்சி*
🎲 எல்லோருக்கும் பொதுவாகவும், எல்லா உயிர்களினுடைய நன்மையிலும் அக்கறை கொண்டவராகவும், வாழவேண்டிய மனிதர்கள் தன்னுடைய சுயநல சிந்தனையை அறவே கைவிட்டு விட வேண்டும். பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று இனி இந்த பூமியில் இருக்க முடியாது. பொறுப்பை உணர்ந்து கடமையை அறிந்து தானும், தன்னை சார்ந்தவர்களையும், பூமியையும் பாதுகாத்து வாழ்வதே மனித பிறவியினுடைய, அடிப்படை நோக்கம் என்பதை அனைத்து உலக மக்களும் உணர்வந்து. இதற்கு உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் மனவளக்கலை பயிற்சிகளை நாள் தவறாமல் செய்து நாமும் நம் குடும்பமும் நிறைவாக வாழ்வோமாக. வாழ்க வளமுடன்...
🎲 *இன்றைய மூலிகை*
🎲 *கருஞ்சீரகம்* தேவேயான பொருள் கருஞ்சீரகம் – 50gm,
வெந்தயம் – 250gm,
ஓமம் – 100gm
🎲 மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனித்தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும். இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்,இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.
🎲 தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது. தேவையான கொழுப்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது, இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.
🎲 நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது, மலச்சிக்கல் நீங்குகிறது,
பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது. மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது, ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது. நீரிழிவு நோய் கட்டுக்குள் வைக்க படுகிறது.
🎲 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🎲 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🎲 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🎲 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment