🔥❄️🔥❄️🔥❄️🔥❄️🔥❄️🔥
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஏப்ரல் 22*
🔥❄️🔥❄️🔥❄️🔥❄️🔥❄️🔥
💯 *இன்றைய நித்தியகடன்*
💯 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
💯 *இன்றைய சாதகம்*
💯 வியாழக்கிழமை
காலை:- துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
💯 *இன்றைய நற்சிந்தனை*
💯 பருவநிலை மாறுதல்களுக்கு ஏற்ப உடலிலும் மனதிலும் பல விதமான ரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த ரசாயன மாற்றங்களை சமம் செய்து கொள்ளும்போது, அந்த உடலுக்கும், மனதிற்கும் எதிர்வினைகள் இல்லாமல் வாழ்க்கை இயல்பாகவே நகர்கிறது. இந்த ரசாயன மாற்றத்தை சமம் செய்து கொள்ள முடியாமல் போகும்போது உடலில் நோயும், மனதில் குழப்பமும், வாழ்க்கையில் சிக்கல்களும் உருவாகின்றன.
💯 *இன்றைய தற்சோதனை*
💯 உடற்பயிற்சி, காயகல்பம், தவம் இந்த ஏற்றத்தாழ்வான ரசாயன மாற்றத்தை சமம் செய்து கொள்வதற்காகவே நமக்கு "அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி" அவர்களால் அன்போடு அருளப்பட்டிருக்கிறது. இந்த வழிமுறையை கடைபிடித்தே ஆக வேண்டும் என்று இதற்கு முன்னமே தன்னிலை உணர்ந்த சித்தர்களும், மகான்களும், மனிதர்களை ஒரு நெறிமுறைகளுக்குள் கொண்டுவர வேண்டுமென்று முயற்சி செய்தார்கள். அது பக்தி மார்க்கமாக மலர்ந்தது. இப்போது அதே மார்க்கம் விஞ்ஞானபூர்வமாக ஆராய்ச்சியோடு ஞான மார்க்கமாக விளக்கப்படுகிறது. தற்சோதனை செய்து பக்தி மார்க்கத்தையும், ஞான மார்க்கத்தையும், ஒன்றிணைத்துக் கொண்டு உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள்.
💯 *இன்றைய பண்புப் பயிற்சி*
💯 எல்லாமே ஒன்றிலிருந்து ஒன்றாக வந்து அமைந்திருக்கிறது, என்ற உண்மையை உளமார ஏற்றுக்கொண்டு அதற்கும் இதற்கும் இருக்கும் ஒற்றுமையை சிந்தித்து சமச்சீர் அறிவில் உயர்வு காண வேண்டும். எல்லாவற்றிலும் இருக்கக்கூடிய உண்மையை உணர்ந்து நன்மையை அறிந்து நலமுற வாழ்வில் உயர்வோம். இப்பண்பே நம்மை கடந்து நமக்குள்ளாக இருக்கும் இறை ஞானத்தை முழுமையாக உயரச் செய்யும் பண்பாகும். வாழ்க வளமுடன்...
💯 *இன்றைய மூலிகை*
💯 சின்ன வெங்காயம் 1, வேப்பிலை 5, மிளகு 3, சீரகம் 10, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள். (ஒரு நபருக்கான அளவு) இவைகளை நன்றாக அரைத்து காலையில் வெறும் வயிற்றில் 20 நிமிடம் வாயில் இருக்கும்படி மென்று உமிழ்நீரை சிறிதுசிறிதாக விழுங்கவும்.
💯 நன்மைகள்:- நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும், உடலில் உள்ள செல்கள் அனைத்தும் பலம் பெறுகிறது, ரத்தம் தூய்மையாகிறது, படிப்படியாக உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அதிகரிக்கிறது.
💯 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
💯 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
💯 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
💯 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment