நித்தியகடன் ஏப்ரல் 21 2021

💢💦💢💦💢💦💢💦💢💦💢

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஏப்ரல் 21*

💢💦💢💦💢💦💢💦💢💦💢

🎲 *இன்றைய நித்தியகடன்*

🎲 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🎲 *இன்றைய சாதகம்*

🎲 புதன்கிழமை 
காலை:- தீபப்பயிற்சி, 
ஒன்பது மையம், 
மாலை:- நித்யானந்தம்.
 
🎲 *இன்றைய நற்சிந்தனை*

🎲 மகாபாரதத்தில் சிசுபாலன் என்ற கதாபாத்திரம். இந்த சிசுபாலனுக்கு கிருஷ்ணனின் கையால் தான் மரணம் என்பதை விதிக்கப்டட்ட விதியாகும். இதனை தெரிந்து கொண்ட சிசுபாலனின் தாய் ஓடிச்சென்று கிருஷ்ணனிடம் ஒரு வரம் கேட்கிறார். என் மகனை நீ உன் கையால் கொள்ளமாட்டேன் என்று வரம் கொடு. அதற்கு கிருஷ்ணன் அது இயலாது, வேண்டுமென்றால் இப்படி செய்யலாம் என்றார். சிசுபாலன் செய்கின்ற நூறு தவறுகளை நான் மன்னித்து விடுகிறேன். அதுவரை நான் அவனை கொல்ல மாட்டேன் என்று வரம் கொடுத்தார். சிசுபாலனின் தாய் சிறிய வயதிலிருந்தே அவருக்கு இந்த கதையை சொல்லித்தான் வளர்த்திருக்கிறார். ஆனாலும் சிசுபாலனினுடைய துர்க்குணம் அவரை மேலும் மேலும் தவறுகள் செய்ய தூண்டுகிறது. நூறு தவறுகள் செய்யும் வரை அமைதியாக இருந்த கிருஷ்ணன் சிசுபாலன் நூத்திஒன்றாவது தவறை செய்து முடித்த அடுத்த கணம், தன்னுடைய கையிலிருந்த சக்கரத்தை பிரயோகப்படுத்தி சிசுபாலனை தண்டித்து விடுகிறார்.

🎲 *இன்றைய தற்சோதனை*

🎲 பாவத்தின் உச்சகட்டத்திற்கு வந்து விட்டபோது இயற்கை மனிதனை அழித்து விட்டது. இந்த கதையிலிருந்து நாம் தற்போது நடக்கும் விஷயத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் ஒரு உண்மை புரியும். உன்னுடைய பாவகோப்பை எப்போது நிரம்புகிறதோ அதுவரை நீ! மன்னிக்க படுவாய். இந்த வாசகத்தை இயேசுபிரான் பைபிளில் குறிப்பிடுகிறார். இந்த பூமியில் மனிதர்கள் செய்யும் பாவங்கள் நிரம்பிவிட்டது. அதனால் இயற்கை அதனை கழுவி தூய்மை செய்து கொள்ளும் காலகட்டத்தில், இது போன்ற பல்வேறு அசம்பாவிதங்களை உயிரிழப்புகளை பல வடிவங்களில் நாம் சந்திக்க வேண்டியதாக உள்ளது.

🎲 *இன்றைய பண்புப்பயிற்சி*

🎲 இவ்வளவு காலம் பொறுமையாக அமைதியாக இருந்த இயற்கை, இந்த மனிதர்கள் செய்கின்ற அத்தனை தவறுகளையும் மன்னித்து கொண்டிருந்த இயற்கை, இன்று அந்த அமைதியை மௌனத்தை கலைத்து கொண்டு, உலக மக்களின் பாவங்களுக்கு தீர்ப்புகளை எழுதிக் கொண்டிருக்கிறது. எப்படி வாழ வேண்டும் என்று தெரிந்திருந்தும் அப்படி மனிதர்கள் வாழாமல், தவறுகளையும் பாவங்களையும் செய்து தன்னை தானே தண்டனைக்கு உட்படுத்திக் கொண்டு, மனிதர்களின் வாழ்க்கை ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இறப்புக்கும் பிறப்புக்கும் இடைப்பட்ட இந்த மனித வாழ்க்கையின், உண்மை தன்மையை உணர்ந்து கொண்டு இயற்கையை மதித்து வாழ்வோம். எல்லாவகையிலும் எல்லாவழியிலும் வாழ்க வளமுடன்...

🎲 *இன்றைய மூலிகை*

🎲 *செம்பருத்தி* இரண்டு செம்பருத்தி பூ
(மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.  

🎲 இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.

🎲 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🎲 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🎲 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🎲 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments