நித்தியகடன் ஏப்ரல் 20 2021

🗾🎲🗾🎲🗾🎲🗾🎲🗾🎲🗾

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஏப்ரல் 20*

🗾🎲🗾🎲🗾🎲🗾🎲🗾🎲🗾

🌐 *இன்றைய நித்தியகடன்*

🌐 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🌐 *இன்றைய சாதகம்*

🌐 செவ்வாய்கிழமை 
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
 
🌐 *இன்றைய நற்சிந்தனை*

🌐 வருமுன் காத்துக் கொள்வோம். வராது என்பதற்கு எந்தவிதமான சான்றும் இல்லை. ஆனால் வருவதற்கு உண்டான அறிகுறிகள் அனைத்தும் நன்றாகவே தென்படுகிறது. இதற்காக நாம் பயப்படவோ! அச்சப்படவோ! தேவையில்லை. உணவு முறையை மாற்றி அமைத்துக்கொண்டு சரியான முறையில் பயிற்சிகளை செய்து அனைத்தையும் எதிர்கொள்ள தயாராவோம். வேதாத்திரியம் ஒரு நோய் எதிர்ப்பு சக்திக்கு உண்டான பயிற்சி முறையே என்பதை மறந்துவிட வேண்டாம்.
  
🌐 இஞ்சி 15 கிராம் 
தண்ணீர் 30ml
தேன் ஒரு டீஸ்பூன்

🌐 செய்முறை:- இஞ்சியை நன்றாக அரைத்து தண்ணீர் கலந்து அதில் உள்ள சுண்ணாம்பு படிந்த பின் தெளிந்த சாறை மட்டும் எடுத்துக் கொள்ளவும், அதனோடு தேன்கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் தினமும்.

🌐 சின்ன வெங்காயம் 15 கிராம் 
தண்ணீர் 30ml
தேன் ஒரு டீஸ்பூன்

🌐 செய்முறை:- சின்ன வெங்காயத்தை நன்றாக அரைத்து தண்ணீர் கலந்து சாறு எடுத்துக் கொள்ளவும், அதனோடு தேன்கலந்து மாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் தினமும். (மேலே செல்லப் பட்டவை ஒரு நபருக்கான அளவு) மேலும் உணவை ஆறு சுவைகளோடும் நன்றாக மென்றும் உமிழ்நீரோடு கலந்தும் உண்ண வேண்டும்.

🌐 *இன்றைய தற்சோதனை*

🌐 இந்த கொரோனா வைரஸ் எங்கே துவங்கியதோ, அந்த நாட்டில் தன்னை தற்காத்துக் கொண்ட, சில முறைகள் நமக்கு வலைதளங்கள் மூலமாக கிடைத்திருக்கிறது. இவைகளையும் பின்பற்றுவோம். தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து காலை, மாலை இரண்டு வேளையும் நீராவி பிடிக்க வேண்டும். அடிக்கடி வெந்நீர் குடிக்க வேண்டும். மஞ்சள், மிளகு, நாட்டுச்சக்கரை கலந்த பால்-ஐ அடிக்கடி பருக வேண்டும். இவைகளைத்தான் தற்காப்புக்காக தற்போது அந்நாட்டு மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இயற்கையில் ஒரு உண்மையை நாம் மறந்துவிடக்கூடாது. எல்லா காலகட்டங்களிலும் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு, நம் உடலில் பூரணமாக இருந்தால் இதுபோன்று எதற்கும் நாம் அச்சப்பட தேவையில்லை.

🌐 *இன்றைய பண்புப்பயிற்சி*

🌐 நாள் தவறாமல் உடற்பயிற்சி, நாள் தவறாமல் காயகல்பம், நாள் தவறாமல் தவம், ஒவ்வொரு கணப்பொழுதும் தற்சோதனை என்று மகரிஷி அன்போடு அருளியதற்கு இதுவே முக்கிய காரணம். முழுமையான நோய் எதிர்ப்பு சக்தியோடு எதிர்வரும் காலங்களை எதிர்கொள்வோம். முக்கிய குறிப்பு:- இதனை தொடர்ந்து நம்முடைய மாநில அரசும், மத்திய அரசும் சொல்லக்கூடிய நோய் தடுப்பு முறைகளைக் கட்டாயம் பின்பற்றவோம். வரும் முன் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வோம். வந்தாலும் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு அவைகளை வென்றே தீருவோம். இன்றும், என்றும், என்றென்றும் ஜெய்ஹிந்த்... வெல்க பாரதம்... வாழ்க பாரதம்... வாழ்க வளமுடன்...

🌐 *இன்றைய மூலிகை*

🌐 *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.

🌐 இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும். 

🌐 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🌐 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🌐 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🌐 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments