🌽🌀🌽🌀🌽🌀🌽🌀🌽🌀🌽
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஏப்ரல் 19*
🌽🌀🌽🌀🌽🌀🌽🌀🌽🌀🌽
🌞 *இன்றைய நித்தியகடன்*
🌞 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🌞 *இன்றைய சாதகம்*
🌞 திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
🌞 *இன்றைய நற்சிந்தனை*
🌞 நம் வாழ்க்கையில் ஆழமாக சிந்தித்து, உணர்ந்து, புரிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள் நிறைய இருக்கிறது. அதில் இது மிகவும் முக்கியமானது எந்த ஒன்றையும் கடந்து போவதற்கு நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். இது இன்பம், துன்பம், ஞானம் என அனைத்திற்கும் பொருந்தும்.
🌞 *இன்றைய தற்சோதனை*
🌞 எந்த ஒன்றையும் சார்புத் தன்மை இல்லாமல் சரியாகப் புரிந்துகொண்டு அதனை பயன்படுத்தும் அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். பற்று நிறைந்த பழக்க வழக்கங்கள் ஒருநாளும், ஒருபோதும் நம்மை நியாயமான முடிவுகளை எடுப்பதற்கு விடுவதில்லை. இதனை நன்கு தற்சோதனை செய்து பற்றற்ற நிலைக்கு உயர்வோம்.
🌞 *இன்றைய பண்புப் பயிற்சி*
🌞 அனைத்தையும் சமமாக பாவிக்கும் பண்பு நம்மை ஒரு நாளும் தவறான பாதையில் அழைத்துச் செல்வதில்லை. எந்த ஒன்றை கடப்பதற்கும், நமக்குள்ளிருக்கும் களவுத்தன்மையை புரிந்துகொள்வதற்கும், இந்த பண்பு நமக்கு சிறப்பாக உதவி செய்கிறது. இந்த பண்பில் ஒவ்வொரு நொடியும் வாழும் போது மனநிறைவும், ஞானமும் நிறைவாகப் பெறுவோம் என்பது உண்மை. வாழ்க வளமுடன்...
🌞 *இன்றைய மூலிகை*
🌞 *அருகம்புல் பானம்* ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.
🌞 அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும்.
🌞 இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.
🌞 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🌞 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🌞 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🌞 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment