நித்தியகடன் ஏப்ரல் 18 2021

🎨🛰️🎨🛰️🎨🛰️🎨🛰️🎨🛰️🎨

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஏப்ரல் 18*

🎨🛰️🎨🛰️🎨🛰️🎨🛰️🎨🛰️🎨

🍁 *இன்றைய நித்தியகடன்*

🍁 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🍁 *இன்றைய சாதகம்*

🍁 ஞாயிற்றுகிழமை 
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம் 
மாலை:- இறைநிலை தவம்.
 
🍁 *இன்றைய நற்சிந்தனை*

🍁 இந்த பூமியில் வாழும் சுதந்திரம் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது. மனிதன் சிந்திக்கத் தொடங்கிய நாள் முதல் கொண்டு இந்த விஞ்ஞானம் கருவிகள் அனைத்தும் உருவாகத் துவங்கியது. இதன் விளைவாக நிலப்பிரிவு, இனப்பிரிவு, மொழி பிரிவு என்று மனிதர்களை பல்வேறு பிரிவுகள் தொற்றிக் கொண்டது. இந்த பிரிவுகளுக்குள் மனிதர்கள் சிக்கிக்கொண்டு எல்லை கட்டிய வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

🍁 *இன்றைய தற்சோதனை*

🍁 மனித இனம் இந்த பூமியில் ஏன் தோன்றியது? மனிதர்கள் இந்த பூமியில் எவ்வாறு வாழவேண்டும்? மனிதர்களுக்கும் இந்த பூமிக்கும் என்ன தொடர்பு? ஒவ்வொருவருக்கும் உள்ள கடமை என்ன? பொறுப்பு என்ன? என்று அனைத்தையும் சிந்திக்க வேண்டும். எதை பெறுவதற்காக இந்த மனிதர்கள் நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறார்கள். பொருள், புகழ், அதிகாரம், புலனின்பம் என்று ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உண்மையில் என்னதான் தேவை. ஒன்றே ஒன்றுதான் சுதந்திரம் ஜீவ சுதந்திரம்...

🍁 *இன்றைய பண்புப்பயிற்சி*

🍁 உடலுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் உயிர் சுதந்திரம் பெறுவதற்காகவே முயற்சிக்கிறது. அதுதான் நம்மை பல்வேறு சூழ்நிலைகளுக்கு இழுத்துச் செல்கிறது. அதிலிருந்து ஏதேனும் ஒரு பாடத்தை நமக்கு கற்பித்து உண்மையை புரியவைக்க முயற்சி செய்கிறது. இந்த உயிர் சுதந்திரத்திற்கு பொருத்தமான செயல்களை பண்புகளை வாழ்க்கையாக வாழ துவங்கும்போது, மனித வாழ்க்கை விடியலை நோக்கி முளைத்து எழும். அதுவரை போட்டி, பொறாமை, வஞ்சம், பொய், சூது, கொலை என அனைத்தும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஊக்குவிக்கப்பட்டு கொண்டேதான் இருக்கும். வாழ்க வளமுடன்...

🍁 *இன்றைய மூலிகை*

🍁 *துளசி* தேவையான பொருட்கள்
துளசி இலை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
நாட்டு சர்கரை – தேவையான அளவு

🍁 *செய்முறை*
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். துளசி தேநீரைதயார்.

🍁 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🍁 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🍁 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🍁 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments