நித்தியகடன் ஏப்ரல் 17 2021

🍭⛳🍭⛳🍭⛳🍭⛳🍭⛳🍭

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஏப்ரல் 17*

🍭⛳🍭⛳🍭⛳🍭⛳🍭⛳🍭

🎭 *இன்றைய நித்தியகடன்*

🎭 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🎭 *இன்றைய சாதகம்*

🎭 சனிக்கிழமை 
காலை:- சாந்தி தவம் 
மாலை:- நித்தியானந்ததவம்.
 
🎭 *இன்றைய நற்சிந்தனை*

🎭 மனதிலிருக்கும் நினைவுகளை தரம் பிரித்து அதன் விளைவை உணர்ந்து நன்மை தரும் எண்ணங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வரலாம். உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய நினைவுகளை, எண்ணங்களை அதனுடைய வலிமையை குறைத்து அமைதியாகி நம்முடைய காரியத்தில் வெற்றி பெற வேண்டும். இது ஒரு சிறந்த வழிமுறையாகும்.

🎭 *இன்றைய தற்சோதனை*

🎭 நமக்கு தொல்லை தரக்கூடிய தேவையில்லாத எண்ணங்களை வாழ்த்தும் போது அதனுடைய எதிர்மறையான தன்மைகள் மாறும். இவைகள் நமக்கு விரோதமாக இருந்து செயல் புரியாமல் இணக்கமான தன்மைக்கு மாறிவிடும். வாழ்த்துவது ஒரு சிறந்த வழிமுறையாகும். சிறுக, சிறுக சிந்தனையில் நல்லவைகள் முளைக்கத் துவங்கும். முழுமையாக நம்முடைய வாழ்க்கை நன்மையை நோக்கி நகரும். தற்சோதனை செய்து வாழ்த்தி பாருங்கள் வாழ்வதற்கான இடத்திற்கு வாருங்கள் "மனதிலிருந்து மனதிற்கு"

🎭 *இன்றைய பண்புப் பயிற்சி*

🎭 உங்களிடம் இருக்கும் மிகப்பெரிய வலிமை வாய்ந்த ஆயுதம் மனம். புறமனதிலிருந்து தேங்கித் தேங்கி துன்பங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலைமையிலிருந்து நடு மனதிற்கும், ஆழ்மனதிற்கும் பயணம் செய்யுங்கள். உங்களுக்கு தேவையான அனைத்தும் நடு மனதிலும், ஆழ்மனதிலும் இருக்கிறது. இந்த நடு மனதிற்கும், ஆழ்மனதிற்கும், செல்லக்கூடிய செயல் "அன்பும் கருணையும்" அனைத்தையும் அன்போடும் கருணையோடும் அரவணைத்துக் கொண்டு வாழும் இந்தப் பண்பில் உயர்ந்து வாருங்கள். முழுமையை நோக்கி பயணம் செய்யுங்கள். வாழ்க வளமுடன்...

🎭 *இன்றைய மூலிகை*

🎭 *கருஞ்சீரகம்* தேவேயான பொருள் கருஞ்சீரகம் – 50gm, 
வெந்தயம் – 250gm,
ஓமம் – 100gm

🎭 மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனித்தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும். இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்,இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.

🎭 தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது. தேவையான கொழுப்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது, இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.

🎭 நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது, மலச்சிக்கல் நீங்குகிறது, 
பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது. மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது, ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது. நீரிழிவு நோய் கட்டுக்குள் வைக்க படுகிறது. 

🎭 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🎭 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🎭 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🎭 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments