நித்தியகடன் ஏப்ரல் 16 2021

🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஏப்ரல் 16*

🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳

🌍 *இன்றைய நித்தியகடன்*

🌍 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🌍 *இன்றைய சாதகம்*

🌍 வெள்ளிகிழமை 
காலை, மாலை இரண்டு 
வேளையும் சாந்தி தவம்.
 
🌍 *இன்றைய நற்சிந்தனை*

🌍 இவ்வுலகில் ஏதோ ஒரு பகுதியில் ஒருவர் எடுத்த முடிவு, இன்று உலகம் முழுவதும் அதனுடைய விளைவு விரிந்து, பரந்து, பரவி கொண்டு இருக்கிறது. சிறிய முடிவுகளுக்கு சிறிய விளைவு, பெரிய முடிவுகளுக்கு பெரிய விளைவு. இனி இந்த பூமியில் எது நடந்தாலும் அது மிகவும் பிரம்மாண்டமாகவே நடைபெறும். உணர்ச்சிவயப்பட்டு எடுக்கும் முடிவுகள் உலகையே உலுக்கி தள்ளிவிடும். ஏனெனில் இன்று உள்ள விஞ்ஞான வளர்ச்சி, தொலை தொடர்பு, வசதி வாய்ப்புகள் என்று இதனுடைய அடிப்படையில் சிறிய விளைவுகள் எதுவும் இருக்கப்போவதில்லை. ஆக இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவெனில்...

🌍 *இன்றைய தற்சோதனை*

🌍 எங்கேயோ இருந்து நாம் செய்யும் நல்ல செயல்களும் தீய செயல்களும் பெரிதாக என்ன பாதிப்பை ஏற்படுத்திவிட போகிறது என்று சிந்திக்காமல், நாம் எடுக்கும் முடிவுகள் தான் எதிர்கால மக்கள் வாழ்க்கையை தீர்மானிக்கிறது, என்பதை உணர்ந்து கொள்வோம். நல்ல சிந்தனைகள் தான் நல்ல முடிவுகளை தரும். இது உலகில் நிலை பெறுவதற்கும் நடைமுறை படுத்தப்படுவதற்கும் கால தாமதமாகலாம். அவைகளையெல்லாம் நாம் சரியாக உணர்ந்து கொண்டு அக்கறையோடும் பொறுப்போடும் செயல்பட வேண்டும்.

🌍 *இன்றைய பண்புப்பயிற்சி*

🌍 நம் கருமையத்தில் எல்லாவகையான மிருக குணங்களும் மனித குணங்களும் உள்ளடக்கமாக இருக்கிறது. இவைகளில் எதை வளர்க்க வேண்டும் என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். நமக்குள் நாம் எதற்கு வாய்ப்பு கொடுக்கிறோமோ அதுவே வளர்ச்சி பெறும். நம்முடைய இயல்பான எண்ணமாகவும் அதுவே மாறிவிடும். உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இப்பயிற்சிகளை நாள் தவறாமல் செய்யும் பொழுதும் உங்களை ஆழமாக இவற்றில் ஈடுபடுத்திக்கொள்ளும் பொழுதும் நம்மை மேன்மை படுத்திக்கொள்ள கூடிய திறமை, அறிவு, நுட்பம், நற்பண்புகள் ஆகியவை நமக்குள்ளாக உயர்வு பெறுகிறது. ஆக உயர்ந்த லட்சியங்களை சிந்தனைகளை எதிர்கால சந்ததிக்காக இன்று நாம் விதைப்போம். நம் மனதிலும் இந்நிலவுலகிலும். வாழ்க வளமுடன்...

🌍 *இன்றைய மூலிகை*

🌍 *நிலவேம்பு குடிநீர்* தேவையான பொருள் தண்ணீர் -200ml
நலவேம்பு ஒரு டேபில் ஸ்பூன்.

🌍 செய்முறை:- நிலவேம்பு ஒரு டேபில் ஸ்பூனை. 200ml தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும் 100ml ஆகும் அளவிற்கு கொதிக்க விடவும்.

🌍 *முக்கிய குறிப்பு:-* காலையில் தயாரித்து. காலை வெறும்
வயிற்றில் பருகவும். மூன்று வயது குழந்தைகளுக்கு 50ml பெரியவர்களுக்கு 100ml
நோய் எதிர்புசக்தி அதிகரிக்கும்.
(வைரஸ் காய்ச்சல் குணமாகும்)

🌍 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🌍 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🌍 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🌍 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments