🛡️🥝🛡️🥝🛡️🥝🛡️🥝🛡️🥝🛡️
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஏப்ரல் 14*
🛡️🥝🛡️🥝🛡️🥝🛡️🥝🛡️🥝🛡️
🍥 *இன்றைய நித்தியகடன்*
🍥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🍥 *இன்றைய சாதகம்*
🍥 புதன்கிழமை
காலை:- தீபப்பயிற்சி,
ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🍥 *இன்றைய நற்சிந்தனை*
🍥 சமுதாயத்தில் சில சமயங்களில் சில பிரச்சனைகள் நம்மை ஓட ஓட துரத்தும், சில சமயங்களில் சில பிரச்சனைகளை நாம் ஓட ஓட துரத்த வேண்டியதாக இருக்கும். வெளியே நடக்கும் இதே விஷயங்கள் நம் உடலுக்குளாகவும் நடைபெறும். அதற்கு பெயர் பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையேயான மனப்போராட்டம். ஓடுவதும், துரத்துவதும், ஒளிந்து விளையாடுவதும் என்று வாழ்க்கையில் பல்வேறு சூழ்நிலைகளை நாம் சந்திக்கின்றோம். பலருக்கு பல வாய்ப்புகள் அமைவதில்லை, சிலருக்கு எல்லா வாய்ப்புகளும் அமைந்துவிடுகிறது. வாழ்க்கை எனும் பாடத்தை அவன் நேரடியாகவும் மறைமுகமாகவும் இருந்து நடத்தி வைக்கின்றான். அவன் நடத்தும் நாடகத்தில் இதுவும் ஒன்று.
🍥 *இன்றைய தற்சோதனை*
🍥 எது எப்படியானாலும் இவை அனைத்திலும் இருந்து நாம் ஒரு சில வாழ்க்கை அனுபவங்களை கற்றுக் கொள்கிறோம். நமக்கு கிடைத்த அனுபவங்களை இந்த பூமியில் பல வடிவங்களில் விட்டுச் செல்கிறோம். புதை பொருள்களாகவும், புத்தகமாகவும், காணொளி காட்சியாகவும். பழையன கழிதலும், புதியன புகுதலும், என வாழ்க்கை முழுவதும் இருக்கவே செய்யும். எல்லாவற்றிற்கும் நாம் நம்மை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். இங்கு இன்று வருத்தப்படுவதற்க்கும் எதுவுமில்லை, மகிழ்ச்சி அடைவதற்கும் எதுவுமில்லை...
🍥 *இன்றைய பண்புப்பயிற்சி*
🍥 எதற்கெல்லாம் நாம் ஆசைப்படக்கூடாது, எதற்கெல்லாம் நாம் ஆசைப்பட வேண்டும், என்ற வரையறை தெரியவில்லை. இந்த தெளிவும் அறிவும் நமக்கு போதவில்லை, என்பதினுடைய அடையாளமே இன்று நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் உலக நிகழ்வுகள் யாவும். இந்த அறிவின் குறைபாடு உள்ளவரை, நம்மால் நமக்கும் நம்மால் பிறருக்கும் அச்சம் இருந்து கொண்டேதான் இருக்கும். இவைகளைப் போக்கி கொள்வதற்கு தன்னிலை விளக்கம் பெறுதல் ஒன்றே தீர்வாகும். வாழ்க வளமுடன்...
🍥 *இன்றைய மூலிகை*
🍥 *செம்பருத்தி* இரண்டு செம்பருத்தி பூ
(மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
🍥 இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.
🍥 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🍥 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🍥 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🍥 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment