🍄🍏🍄🍏🍄🍏🍄🍏🍄🍏🍄
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஏப்ரல் 13*
🍄🍏🍄🍏🍄🍏🍄🍏🍄🍏🍄
🌳 *இன்றைய நித்தியகடன்*
🌳 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🌳 *இன்றைய சாதகம்*
🌳 செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
🌳 *இன்றைய நற்சிந்தனை*
🌳 ஒரு நாட்டின், சமுதாயத்தின் வளர்ச்சி என்பது சாத்வீக முறையில் இருக்க வேண்டும். தொழில் வளர்ச்சியும், அரசியல் அமைப்பும், சமுதாய முன்னேற்றமும் தரமற்ற முறையில் இருக்கக் கூடாது. ஒருவருடைய பலகீனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, அதன் மூலமாக வளர்ச்சி பெறும் அனைத்துமே தரமற்ற சிந்தனை, செயல், திட்டங்கள், இவ்வாறாக செயல்படுபவர்கள் மனிதர்களே அல்ல. அவர்கள் விலங்கினத்தின் தன்மையில் வாழக்கூடிய வெறும் மனித உருவங்கள். அதாவது அக்ரினை பொருள்கள்.
🌳 *இன்றைய தற்சோதனை*
🌳 இனி இந்த உலகிற்கும் மனிதர்களுக்கும் ராஜதந்திரங்கள் எல்லாம் தேவையில்லை. ஒருவர் மீது ஒருவர் ஆட்சி செலுத்துவதும் அதிகாரம் செலுத்துவதும் வன்முறையாகும், அறிவின் குறைபாடாகும். இது ஒருவகையில் ஐந்தறிவு ஜீவன்களுடைய குணம். ஆறாவது அறிவுகொண்ட மனிதர்கள் தன்னுடைய அறிவில் உயர்வு பெறுவதற்கான, வழி முறைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். தனிமனிதனின் பாதுகாப்பில் துவங்கி உலக அரசியல் உலக பொருளாதாரம் அனைத்தும் மாற்றம் பெறட்டும். வையகத்து மக்களின் வாழ்க்கையில் நம்பிக்கையும், பாதுகாப்பும், நேர்மையும் ஒளிரட்டும்...
🌳 *இன்றைய பண்புப்பயிற்சி*
🌳 "உலகிலுள்ள பொறுப்புடைய தலைவரெல்லாம் உயிரறிவை, உள்ளுணர்வாய் பெறுதல் வேண்டும்." இதற்கு ஒவ்வொரு மனிதர்களும் வாழவேண்டிய முறையில் கடமையில் வாழவேண்டும். இயற்கை தத்துவத்தை மதித்து வாழ்வதே தனிமனித கடமையும் ஒழுக்கமுமாகும். இதனை நோக்கி மனிதகுலம் எப்போது திரும்புகிறதோ அந்த நொடி முதல் இவ்வுலக மக்கள் வாழ்க்கை பாதுகாக்கப்படும். அன்பான அருள்காப்பால் அரவணைக்கப்படும். வாழ்க வளமுடன்...
🌳 *இன்றைய மூலிகை*
🌳 *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
🌳 இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும்.
🌳 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🌳 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🌳 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🌳 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment