நித்தியகடன் ஏப்ரல் 12 2021

💦🔺💦🔺💦🔺💦🔺💦🔺💦

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஏப்ரல் 12*

💦🔺💦🔺💦🔺💦🔺💦🔺💦

🔥 *இன்றைய நித்தியகடன்*

🔥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🔥 *இன்றைய சாதகம்*

🔥 திங்கட்கிழமை 
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 
மாலை:- நித்யானந்த தவம்.
 
🔥 *இன்றைய நற்சிந்தனை*

🔥 தவம், உடற்பயிற்சி, காயகல்பம், மௌனம் இவைகளின் வழியாக பெருக்கும் ஆற்றல் நம்முடைய, அன்றாட பழக்க வழக்கம் என்னவோ அதற்கே அவ்வாற்றல் செலவாகும். சாதாரணமாக இருக்கும் போது கிடைத்த ஆற்றலைக் காட்டிலும் பயிற்சியின் வழியாக கிடைக்கும் ஆற்றலுக்கு வலிமை மிகவும் அதிகம். இந்த வளமான ஆற்றலை சரியான செயல்களின் வழியாக செலவழிக்கத் தான் வேண்டும். சரியான வழி பாதை என்ன..? அதை எப்படி அமைத்துக் கொள்வது? சிந்திப்போம்...

🔥 *இன்றைய தற்சோதனை*

🔥 கிடைத்த சக்தியை, ஆற்றலை, தனக்கும், பிறருக்கும், தற்காலத்திலும், பிற்காலத்திலும், மனதுக்கும், உடலுக்கும் நம் எண்ணம், சொல், செயல் இவைகள் வழியாக துன்ப விளைவை ஏற்படுத்திக் கொள்ளாததே தூய செயலாகும், மனித செயலாகும், இறை ஞானமுமாகும். தற்சோதனை ஒன்றுதான் குவிந்து சேர்ந்த, நல்ல ஆற்றலை சரியான செயல்களுக்கு, பயன்படுத்தும் பண்பினை கொடுக்கும்.

🔥 *இன்றைய பண்புப் பயிற்சி*

🔥 பண்போடு வாழுதல் என்பது வேறொன்றுமல்ல, நம்முள் குவியும் ஆற்றலை சீராக நல்வினை தூண்டலுக்கு மட்டுமே பயன்படுத்தும், அந்த செயலுக்கு தான் மனிதப் பண்பு என்றும், இறை ஞானம் என்றும், இறைவன் மனிதனுக்கு வாழ கொடுத்த வாய்ப்பு என்றும் தெளிவாக சொல்லிவிடலாம். எக்காலத்திலும் தனக்கும், பிறருக்கும் துன்பம் எழாத வகையில் செயல்களை சீரமைத்து கொண்டு சிறப்போடு வாழ்வீராக. வாழ்க வளமுடன்..!

🔥 *இன்றைய மூலிகை*

🔥 *அருகம்புல் பானம்* ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.

🔥 அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். 

🔥 இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.

🔥 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🔥 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🔥 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🔥 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments