🎱🎑🎱🎑🎱🎑🎱🎑🎱🎑🎱
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஏப்ரல் 11*
🎱🎑🎱🎑🎱🎑🎱🎑🎱🎑🎱
🌍 *இன்றைய நித்தியகடன்*
🌍 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🌍 *இன்றைய சாதகம்*
🌍 ஞாயிற்றுகிழமை இன்று அமாவாசை காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம்.
🌍 *இன்றைய நற்சிந்தனை*
🌍 மனித வாழ்க்கையில் இருக்கக்கூடிய சிக்கல்களும், துன்பங்களும், இன்னல்களும், இடர்பாடுகளும் ஒரு சீரான அறிவுஉயர்வின் கீழாக சரியான இடைவெளியில் சீரமைக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. காலத்துக்கு காலம் இந்த துன்பங்களில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளும் மனித அறிவிலிருந்து வெளிப்பட்டுக் கொண்டும் இருக்கின்றது. அறிவின் முழுமையான தன்மையை மனித சமுதாயமும் இன்னும் சில நாட்களில் தன்னுடைய வாழ்வியலாக வாழ போகிறார்கள் என்பது நிச்சயிக்கப்பட்ட உண்மையாகும்.
🌍 *இன்றைய தற்சோதனை*
🌍 இதுநாள் வரையில் மனித வாழ்க்கையில் இருந்த அனைத்து வகையான சிக்கல்களுக்கும், துன்பங்களுக்கும், இடர்பாடுகளும், இன்னல்களுக்கும் என்ன காரணம்...? என்பதை நாம் கண்டறிய தொடங்கிவிட்டோம். இது ஒரு இனிமையான தொடக்கம் இந்த துவக்கத்தின் முடிவானது மிகவும் பிரமாண்டமாக அமைதியான ஆளுமை திறனை மேம்படுத்திக் கொண்ட நிறைவோடு அமையப்போகிறது. உயிரை, மனதை ஆளக்கூடிய திறமை மனிதர்களுக்கும் பெருகும் காலம் தொடங்கிவிட்டது.
🌍 *இன்றைய பண்புப்பயிற்சி*
🌍 தனக்கு தேவையானவற்றை, தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுங்கள் என்ற முறையில் வாழ்க்கையை வாழத் துவங்கிய இந்த மனித சமுதாயம், தேவைகளும், தேவைகளுக்கு துணையான பொருள்களும், அமைப்புகளும் எவ்வாறு உருவானது, என்பதை தெரிந்து கொள்வதற்கான தெய்வீக அறிவு, ஆன்மீக மேம்பாடு, இறைஞானம் உருவாகும் காலம் இது. இந்த காலத்தை இந்த மனித சமுதாயம் மெய்ஞானத்தில் உயர்வு பெறுவதற்காக முழுமையாக பயன்படுத்தும் என்பது இறை சட்டம். ஆன்மிக உயர்வுக்கான இக்காலத்தை வாழ்த்தி வணங்கி வரவேற்போம். வாழ்க வளமுடன்...
🌍 *இன்றைய மூலிகை*
🌍 *துளசி* தேவையான பொருட்கள்
துளசி இலை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
நாட்டு சர்கரை – தேவையான அளவு
🌍 *செய்முறை*
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். துளசி தேநீரைதயார்.
🌍 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🌍 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🌍 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🌍 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment