நித்தியகடன் ஏப்ரல் 10 2021

🕳️🍁🕳️🍁🕳️🍁🕳️🍁🕳️🍁🕳️

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஏப்ரல் 10*

🕳️🍁🕳️🍁🕳️🍁🕳️🍁🕳️🍁🕳️

🐾 *இன்றைய நித்தியகடன்*

🐾 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🐾 *இன்றைய சாதகம்*

🐾 சனிக்கிழமை 
காலை:- சாந்தி தவம் 
மாலை:- நித்தியானந்ததவம்.
 
🐾 *இன்றைய நற்சிந்தனை*

🐾 மனம் எப்போதும் ஏதோ ஒன்றை சுமந்து கொண்டே இருக்கும். ஏதோ ஒன்றினுடைய பின்னால் பயணித்துக் கொண்டே இருக்கும். தன்னுடைய வாழ்நாட்களை சதாசர்வகாலமும் இப்படியே கடந்து சென்றுகொண்டே இருக்கும். இவ்வாறான மனதிற்கு சரியானதொரு பயிற்சியை வழங்கி, எதன் பின்னால் செல்ல வேண்டும், எதை சுமந்துகொண்டு பயணிக்க வேண்டும், என்பதை நாம்தான் மனதிற்கு புரிய வைக்க வேண்டும். இதனை புரியவைப்பதற்கு செய்யப்படும் முயற்சிக்கு பெயர்தான் யோக சாதனை.

🐾 *இன்றைய தற்சோதனை*
 
🐾 பயிற்சி கொடுத்தால் நாளைக்கே மனம் மாற்றம் பெற்று விடுமா? என்றால் இல்லை. அதற்கு போதிய கால அவகாசம் தேவைப்படும். உயிரின் மீது மனதிற்கு நம்பிக்கையும், மனதினுடைய தன்மைகளில் மாற்றங்களும் உருவாக வேண்டும். இந்த மாற்றங்களுக்கு பின்னால் அது தன்னுடைய சுயத்தை உணரத் துவங்கும். அவ்வாறு அது உணர துவங்கும் போது நமக்கு தெளிவும் மனநிறைவும் ஏற்படும். இவை யாவும் தற்சோதனையின் சாதனையாகும்.

🐾 *இன்றைய பண்புப்பயிற்சி*

🐾 மீண்டும் மீண்டும் மனதிற்கான பயிற்சியிலும், உடலுக்கான பயிற்சியிலும், உயிருக்கான பயிற்சியிலும் நாம் துவண்டு விடாமல் ஆர்வத்தோடு நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். இந்த ஆர்வமானது சிறிது காலம் வரையிலோ, அல்லது நேரம் கிடைக்கும் போது மட்டுமே என்று எல்லை கட்டிய சிந்தனையோடு, திட்டத்தோடு துவங்காதீர்கள். தொலைநோக்கோடு இதனை புரிந்துகொண்டு, நீண்ட நெடிய உழைப்புக்கு பின்னால், முயற்சிக்குப் பின்னால் கிடைக்கும் வெற்றி இது என்ற உண்மையை உணர்ந்து, உள ஆர்வத்தோடு ஆன்மீக உயர்வு பெறுவோம்.. வாழ்க வளமுடன்...

🐾 *இன்றைய மூலிகை*

🐾 *இஞ்சி + சின்ன வெங்காயம் + நீராவி பிடித்தல்*

🐾 இஞ்சி 15 கிராம் 
தண்ணீர் 30ml
தேன் ஒரு டீஸ்பூன்

🐾 செய்முறை:- இஞ்சியை நன்றாக அரைத்து தண்ணீர் கலந்து அதில் உள்ள சுண்ணாம்பு படிந்த பின் தெளிந்த சாறை மட்டும் எடுத்துக் கொள்ளவும், அதனோடு தேன்கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் தினமும்.

🐾 சின்ன வெங்காயம் 15 கிராம் 
தண்ணீர் 30ml
தேன் ஒரு டீஸ்பூன்

🐾 செய்முறை:- சின்ன வெங்காயத்தை நன்றாக அரைத்து தண்ணீர் கலந்து சாறு எடுத்துக் கொள்ளவும், அதனோடு தேன்கலந்து மாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் தினமும். 

🐾 நீராவி பிடித்தல்:- 
குடிநீர் 1,1/2 லிட்டர்
நன்றாக கொதிக்கவைத்து ஒரு போர்வையை போர்த்தி வாய் வழியாக இழுத்து மூக்கு வழியாகவும். மூக்கு வழியாக இழுத்து வாய் வழியாகவும் மாற்றி மாற்றி நீராவியை இழுத்து விடவும். காலை, மாலை இரண்டு வேளையும் பயன்படுத்தலாம். குறிப்பு:- மினரல் வாட்டர் தவிர்க்கவும்.

🐾 நன்மைகள்:- ஆஸ்மா, நெஞ்சுசளி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, அஜிரணம் என அனைத்தும் குணமாகும், *குறிப்பு:- இஞ்சி சாறும், சின்ன வெங்காயம் சாறும் குழந்தைகளுக்கு 2.5ml போதுமானது*.

🐾 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🐾 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🐾 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🐾 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments