நித்தியகடன் மே 01 2021

🎱❄️🎱❄️🎱❄️🎱❄️🎱❄️🎱

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*மே 01*

🎱❄️🎱❄️🎱❄️🎱❄️🎱❄️🎱

🔶 *இன்றைய நித்தியகடன்*

🔶 அதிகாலை எழுந்து நிதானமாக, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🔶 *இன்றைய சாதகம்*

🔶 சனிக்கிழமை 
காலை:- சாந்தி தவம் 
மாலை:- நித்தியானந்ததவம்.
 
🔶 *இன்றைய நற்சிந்தனை*

🔶 இந்த பூமியில் உயிரினங்கள் தோன்றி, உயிர்களின் வாழ்விடமாகவும், வசிப்பிடமாகவும், அமைந்தது எல்லாம் ஒரு விபத்து, பஞ்சபூதங்கள் கூடியதும் விபத்து, உயிரினங்கள் தோன்றியதும் விபத்து, மனித இனம் உருவானதும் விபத்து, மனிதர்களுக்குள் இனம், மொழி, நாடு என்று வேற்றுமையோடு வாழ்ந்து கொண்டிருப்பதும் விபத்து, அணு சேர்க்கையும் அணுச்சிதைவும் முழுக்க முழுக்க விபத்தின் அடிப்படையிலேயே அமைகிறது. இந்த சூழ்நிலைகளை தாண்டி மனிதன் மனிதனாக வாழ்வதற்கு முயற்சி செய்தால் மட்டும் தான் இந்த பூமியை அமைதியின் சொரூபமாக உருவாக்க முடியும்.

🔶 *இன்றைய தற்சோதனை*

🔶 இந்த விபத்துக்கள் எல்லாம் அப்படியே தான் இருக்குமா? விபத்து இல்லாத ஒரு சூழ்நிலை உருவாகாதா? என்றால் நிச்சயமாக உருவாகும். அதற்கு ஒவ்வொருவரின் மனதையும் விபத்து இல்லாமல் இயக்கி பழக்க வேண்டும். அதாவது பேராசை, சினம், கடும் பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வுதாழ்வு மனப்பான்மை, வஞ்சம் இவைகளும், இவைகள் சார்ந்த எண்ணம், சொல், செயல் யாவும் மன விபத்துக்கள். மனதின் மூலமாக விபத்துக்களை ஏற்படுத்தி கொண்டே வாழும்போது, இந்த பூமியும் மனித வாழ்க்கையும் விபத்து நிறைந்ததாகவே இருக்கும்.

🔶 *இன்றைய பண்புப்பயிற்சி*

🔶 நாம் விபத்தின் மூலம் உருவான காரணத்தால், நம் மனதின் மூலமாக விபத்துக்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். மனதை உயர்த்திக் கொண்டு பக்குவப்பட்ட நிலையில் விபத்துக்கள் இல்லாமல் நம்மால் ஒரு அமைதியான நிறைவான வாழ்வை வாழமுடியும். விபத்துக்கள் இல்லாமல் மனதை எப்போது இயக்கப்பழகி அமைதி பெறுகிறோமோ, அப்போதுதான் தனிமனித அமைதியும் உலக அமைதியும் நிலைநிறுத்தப்படும். விளைவை உணர்ந்து, செயலை செய்து, செம்மை பெறுவோம்... வாழ்க வளமுடன்...

🔶 *இன்றைய மூலிகை*

🔶 *கருஞ்சீரகம்* தேவேயான பொருள் கருஞ்சீரகம் – 50gm, 
வெந்தயம் – 250gm,
ஓமம் – 100gm

🔶 மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனித்தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும். இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்,இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.

🔶 தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது. தேவையான கொழுப்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது, இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.

🔶 நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது, மலச்சிக்கல் நீங்குகிறது, 
பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது. மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது, ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது. நீரிழிவு நோய் கட்டுக்குள் வைக்க படுகிறது. 

🔶 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🔶 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🔶 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🔶 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments