நித்தியகடன் மார்ச் 31 2021

🔷💢🔷💢🔷💢🔷💢🔷💢🔷

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*மார்ச் 31*

🔷💢🔷💢🔷💢🔷💢🔷💢🔷

🍒 *இன்றைய நித்தியகடன்*

🍒 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🍒 *இன்றைய சாதகம்*

🍒 புதன்கிழமை 
காலை:- தீபப்பயிற்சி, 
ஒன்பது மையம், 
மாலை:- நித்யானந்தம்.

🍒 *இன்றைய நற்சிந்தனை*

🍒 நல்லதை பேசுதல், நல்லதை எண்ணுதல், நல்லதை சிந்தித்தல் வேண்டும். தவப்பயிற்சியின் மூலமாக நுண்ணிய நிலைக்கு மனதை இயக்கி பழகிய நாம், எதிர்மறையான சிந்தனைகளை ஊக்குவிக்கக் கூடாது. ஓரளவு உண்மை புரிந்து கொண்ட நாமே வருத்தம், கவலை, அச்சம், கோபம் என்று இவைகளில் சிக்கிக் கொண்டால் எதுவுமே அறியாத பாமர மக்கள் பாவம் அவர்கள் என்ன செய்வார்கள். தானும் பயந்து மற்றவர்களையும் பயமுறுத்தி, மறைமுகமாக அவர்களுக்குள் அச்சத்தை ஏன் தூண்ட வேண்டும்...

🍒 *இன்றைய தற்சோதனை*

🍒 நாம் வருத்தம், கவலை, அச்சம், கோபம் கொண்டால் இவைகளுக்கு வலிமை அதிகம். சாதாரண மக்களை இந்த காந்த அலைகள் சுலபமாக தன்வயப்படுத்தி கொண்டு, அவர்களுக்குள் பெரியதொரு தீய விளைவுகளை சுலபமாக ஏற்படுத்தி விடும். மறைமுகமாக அவர்கள் வாழ்க்கையில் நாம் இத்தகைய விபத்துக்களை ஏற்படுத்த வேண்டுமா..? சிந்தித்து பாருங்கள் அச்சமின்றி ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இவைகளில் ஆழமாக உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.

🍒 *இன்றைய பண்புப்பயிற்சி*

🍒 பதறாத காரியம் சீதளமடையாது. பதட்டத்துடன் வாழ்வது என்பது தேவை இல்லை. இத்தகைய சூழ்நிலை நமக்கும் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் பேராபத்தை விளைவித்து விடும். எதுவானாலும் இறை இயக்க நீதியின் அடிப்படையில் சரியாகவே நடைபெறுகிறது, என்ற உண்மையை ஆய்வுசெய்து அதனுடைய பின்புலத்தை புரிந்து கொள்ளுங்கள். செயலுக்குத் தக்க விளைவு என்பது வந்தே தீரும். இறை இயக்கத்தை வாழ்த்துவோம். வாழ்க வையகம் வாழ்க வளமுடன்...

🍒 *இன்றைய மூலிகை*

🍒 *செம்பருத்தி* இரண்டு செம்பருத்தி பூ
(மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.  

🏵 இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.

🍒 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🍒 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🍒 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🍒 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments