🕸️🔥🕸️🔥🕸️🔥🕸️🔥🕸️🔥🕸️
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*மார்ச் 30*
🕸️🔥🕸️🔥🕸️🔥🕸️🔥🕸️🔥🕸️
💦 *இன்றைய நித்தியகடன்*
💦 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
💦 *இன்றைய சாதகம்*
💦 செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
💦 *இன்றைய நற்சிந்தனை*
💦 மனிதனுக்குள் தெய்வமும் மிருகமும் பின்னிப் பிணைந்து கலந்து வாழ்கின்றது. இதில் ஒன்றுக்கு ஒன்று நேரெதிர் தன்மைகளை உடையது. ஆயினும் ஒன்றின் ஆதிக்கம் மற்றொன்றின் தரத்தை தன்மையை மாற்றியமைக்கும். முழு தெய்வத்தன்மை இயங்கும்போது மிருகம் வீழ்ச்சி அடைகிறது. மிருகத்தன்மை இயங்கும்போது தெய்வம் வீழ்ச்சி அடைகிறது. இந்த இரண்டுக்கும் இடையே நடக்கக்கூடிய போராட்ட நிகழ்ச்சியில் விளைவே மனித வாழ்க்கையில் உடல் நோயாக, வாழ்க்கை சிக்கலாக, மன குழப்பமாக வெளிப்படுகிறது, என்ற உண்மையை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
💦 *இன்றைய தற்சோதனை*
💦 தெய்வத் தன்மைக்கும் மிருகத் தன்மைக்கும் இடையே நடைபெறக்கூடிய ஒரு நீண்ட நெடிய நிகழ்ச்சியை, நம்முடைய மனதை ஒருமுகப்படுத்தி தெய்வத்தன்மையை மேலோங்கச் செய்து கொள்ள முடியும். இதற்கு தெய்வத்தின் தன்மையில் நின்று நிலைத்து நீடித்து சில உண்மைகளை புரிந்து கொண்டு, அதற்குத் தக்கவாறு நம்முடைய செயல்களில் திருத்தங்களை செய்து கொள்ள வேண்டும். இதன் விளைவாகவே தெய்வம் வாழும், மிருகம் வீழ்ச்சி அடையும். சிறுக சிறுக மிருக தன்மையிலிருந்து மாறி, ஒரு சில காலகட்டங்களுக்கு அப்பால் முழுமையாக மிருகத்தன்மை இல்லாத ஒரு முழுநிறைவான வாழ்வை வாழ முடியும்.
💦 *இன்றைய பண்புப்பயிற்சி*
💦 பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் உணர்ச்சிவயப்பட்ட அனைத்து செயல்களும் மிருக தன்மையில் வெளிப்பாடாகும். இந்த குணங்கள் எல்லாம் நமக்குள் இல்லாமல் நம்மை பாதுகாத்து சீரமைத்து சிந்தித்து செயல்படும் பண்பினை வளர்த்துக்கொள்ள வேண்டும். எப்போதும் நம்மை நாம் நிறை மனம், சகிப்புத் தன்மை, ஈகை, கற்பு, சமநேர் நிறை உணர்வு, மன்னிப்பு என்ற தெய்வ குணத்தில் வாழ்வதற்கு முழுயான விருப்பத்தோடு எல்லா காலத்திலும் எல்லா நேரத்திலும் நம்மை தயாராக வைத்துக் கொண்டு முனைப்போடு வாழ வேண்டும் அப்போதுதான் முழுமையாக தெய்வம் வாழும். வாழ்க வளமுடன்...
💦 *இன்றைய மூலிகை*
💦 *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
💦 இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும்.
💦 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
💦 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
💦 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
💦 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment