🗾🌀🗾🌀🗾🌀🗾🌀🗾🌀🗾
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*மார்ச் 29*
🗾🌀🗾🌀🗾🌀🗾🌀🗾🌀🗾
🍃 *இன்றைய நித்தியகடன்*
🍃 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🍃 *இன்றைய சாதகம்*
🍃 திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
🍃 *இன்றைய நற்சிந்தனை*
🍃 மறைபொருளாய் இருந்து செயல் புரியும் செயல்களையும், உண்மைகளையும் நாம் உணர்ந்து கொள்ளாமல் வாழ்க்கையை ஒரு நாளும் ஒரு பொழுதும் நீந்தி கடைத்தேறி விட முடியாது. நாம் கடந்து போகும் ஒவ்வொரு சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு பின்னாலும் ஒரு இறைத்தத்துவம் ஆழமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த இயக்கத்தை எவரொருவர் புரிந்து கொண்டு மதித்து தன்னுடைய வாழ்வை வாழ்கிறாரோ, அவரே நிறைவான வாழ்வை மனமகிழ்ச்சியை, இந்த பூமிக்கு வந்த தன்னுடைய முழு பலனையும் அனுபவமாக பெறுவார்.
🍃 *இன்றைய தற்சோதனை*
🍃 இந்த மறைபொருள்கள் உண்மைகளை உணர்வதற்கு, நமக்கு ஏற்கனவே அதனுடைய அமைப்பும் சிறப்பும் நிறைவாக அமைந்திருக்கிறது. அதை தூண்டிவிட்டு அந்த ஒளியில் நம் உயர்வை காணமுடியும். இன்னது தான் என்பது இறைநீதி, இந்த நீதி ஒருநாளும் எவருக்காகவும் மாற்றம் பெற போவது இல்லை. உயிரின் உண்மையான தன்மைக்கும் தரத்துக்கும் உயர்வதற்கு உகந்த செயல் பண்புகளை செய்து வாழ வேண்டும்.
🍃 *இன்றைய பண்புப்பயிற்சி*
🍃 பூவுக்கும் காய்க்கும் என்ன வாசனை என்பதை தீர்மானித்து, அந்த தீர்மானமாகவே இருந்து வாழும் இறைவனை புரிந்து கொள்வதற்காக உருவானதுதான் இந்த மனித தோற்றம். பிரபஞ்ச உண்மைகளை எல்லாம் நாம் உணர்ந்து கொள்வதற்கு இந்த மனித பிறவியே போதுமானது. இதை சார்ந்த செயல்பாடுகள் நமக்குள் ஒவ்வொரு கணப்பொழுதும் உயர்வு பெற வேண்டும். அவ்வாறு உயரும் போது நமக்குள் இயல்பான இறை ஞானம் பெருகும். வாழ்க வளமுடன்...
🍃 *இன்றைய மூலிகை*
🍃 *அருகம்புல் பானம்* ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.
🍃 அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும்.
🍃 இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.
🍃 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🍃 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🍃 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🍃 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment