🚥🗿🚥🗿🚥🗿🚥🗿🚥🗿🚥
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*மார்ச் 27*
🚥🗿🚥🗿🚥🗿🚥🗿🚥🗿🚥
🌀 *இன்றைய நித்தியகடன்*
🌀 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🌀 *இன்றைய சாதகம்*
🌀 சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
🌀 *இன்றைய நற்சிந்தனை*
🌀 உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு, எண்ணம் இவைகளில் அளவுமீறி முறைமாறி அனுபவிக்க ஆர்வம் கொண்டால், அது நம் உடலில் பலவகையான தீமைகளை ஏற்படுத்துகிறது. விளங்கின பதிவுகளை தூண்ட செய்து விடுகிறது. ஐந்தில் அளவு முறை காத்தல் இது ஒருவகையில் நோய் தொற்றுகளிலிருந்து தற்காப்பு செயலுமாகும். வேதாத்திரி மகரிஷி இந்த ஐந்தில் அளவு முறையை ஏன் வழங்கினார்கள், என்ன அளவு, என்ன முறை மேலும் சிந்திப்போம்.
🌀 *இன்றைய தற்சோதனை*
🌀 நீங்கள் இப்போது தவம் செய்யப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். நாமாக தனியாக தவம் செய்யும்போது நேரத்தை சற்று நீட்டித்துக் கொள்ளலாம் இது அளவு. மாறாக கூட்டு தவத்தில் இருக்கும் போது அங்கே முறையை பின்பற்ற வேண்டும். சரியான நேரத்தில் துவங்கி சரியான நேரத்தில் முடிப்பது முறையாகும். நம்முடைய வாழ்க்கை சூழ்நிலைக்குள் நாம் மட்டும் தனியாக இருந்தோமேயானால், அங்கே பின்பற்ற வேண்டியது அளவை. மற்றவர்களும் அதே வாழ்க்கை சூழ்நிலைக்குள் இருப்பார்களேயானால் அங்கே பின்பற்ற வேண்டியது முறையை.
🌀 *இன்றைய பண்புப்பயிற்சி*
🌀 அலட்சியம் செய்யாமலும், அதிக ஆர்வம் கொள்ளாமலும், நாம் நம் வாழ்க்கையை அளவோடும், முறையோடும், எளிமையாக வாழ்வதற்கும், நோய் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கும், சிந்தித்து திட்டங்களை வகுத்துக் கொண்டு வகுத்த வழியே வாழ்ந்து காட்ட வேண்டும். இப்பண்பில் உயர்வதற்கு இப்பிறவியை நிறைவாக பயன்படுத்தி பயன் காண்போம். அளவு மீறாமல் முறை மாறாமல் ஞானத்தில் உயர்வோம். வாழ்க வளமுடன்...
🌀 *இன்றைய மூலிகை*
🌀 *கருஞ்சீரகம்* தேவேயான பொருள் கருஞ்சீரகம் – 50gm,
வெந்தயம் – 250gm,
ஓமம் – 100gm
🌀 மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனித்தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும். இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்,இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.
🌀 தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது. தேவையான கொழுப்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது, இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.
🌀 நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது, மலச்சிக்கல் நீங்குகிறது,
பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது. மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது, ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது. நீரிழிவு நோய் கட்டுக்குள் வைக்க படுகிறது.
🌀 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🌀 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🌀 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🌀 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment