🌐🔥🌐🔥🌐🔥🌐🔥🌐🔥🌐
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*மார்ச் 23*
🌐🔥🌐🔥🌐🔥🌐🔥🌐🔥🌐
⏳ *இன்றைய நித்தியகடன்*
⏳ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
⏳ *இன்றைய சாதகம்*
⏳ செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
⏳ *இன்றைய நற்சிந்தனை*
⏳ இறைநிலையின் தன்மாற்ற சரித்திரத்தைப் பற்றி நமக்கு ஒரு கேள்வி இந்த நொடியில் எழுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்...... அதற்கான பதில் சில நொடிகள் கழித்து வரலாம், சில நேரங்கள் கழித்து வரலாம், சில நாட்கள் கழித்து வரலாம், சில மாதங்கள் கழித்து வரலாம், சில வருடங்கள் கழித்து வரலாம். நமக்கும் உண்மைக்கும் இடையே எவ்வளவு தூரம் இருக்கிறதோ, அதனை பொறுத்து இந்த விடையானது கிடைக்கும். இதில் என்ன ஒரு வியப்பு என்றால்.... உண்மை எங்கேயோ வெளியில் இல்லை, அது நமக்குளாகவே நம்முடனேயே இரண்டெனக் கலந்திருக்கிறது. ஆனால் அதற்கும் நமக்குமான இணக்கத்தன்மை நட்பு நல்ல முறையில் இல்லை.
⏳ *இன்றைய தற்சோதனை*
⏳ இந்த இடைவெளியை எப்படி குறைப்பது எண்ணம் ஆராய்தல், ஆசை சீரமைத்தல், சினம் தவிர்த்தல், கவலை ஒழித்தல் இவைகளில் நாம் எவ்வளவு தேர்ச்சி பெற்று இருக்கிறோமோ அந்த அளவிற்கு அதற்கும் நமக்குமான இடைவெளி குறையும். ஆக இடைவெளியை குறைத்து கொள்ளவேண்டிய வாய்ப்பு நம்மிடமே முழுமையாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வாய்ப்பினை நாம் தான் சரியாக பயன்படுத்தி தேர்ச்சி பெறவேண்டும். தேர்ச்சி பெறுவதற்கான எல்லா வழிமுறைகளையும் மனவளக்கலை பயிற்சியில் உள்ளடக்கமாக அமைக்கப்பட்டிருக்கிறது.
⏳ *இன்றைய பண்புப்பயிற்சி*
⏳ விலங்கினப் பதிவுகள் ஒருபுறம் தெய்வீக நிலைபாடு ஒருபுறம், இதற்கு நடுவில் தான் நாம் இருந்து போராடிக் கொண்டிருக்கிறோம். பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பங்களில் நம்மை விலங்கினப் பதிவுகள் ஆழ்த்தும். பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் இவைகளை தூண்டிவிட்டு நாம் இறைநிலையோடு இணையும் முயற்சிகளை சிதைப்பதற்கு பலமாக முயற்சி செய்யும். எது எப்படி இருந்தாலும் நாம் நம்முடைய நம்பிக்கையை தளர விடாமல், இறைநிலை கூறிய பண்புகளையும் தன்மைகளையும் உயர்த்திக்கொண்டு பயிற்சிகளின் வாயிலாக உயர்வு பெற வேண்டும். வாழ்க வளமுடன்.....
⏳ *இன்றைய மூலிகை*
⏳ *கருஞ்சீரகம்* தேவேயான பொருள் கருஞ்சீரகம் – 50gm,
வெந்தயம் – 250gm,
ஓமம் – 100gm
⏳ மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனித்தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும். இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்,இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.
⏳ தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது. தேவையான கொழுப்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது, இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.
⏳ நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது, மலச்சிக்கல் நீங்குகிறது,
பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது. மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது, ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது. நீரிழிவு நோய் கட்டுக்குள் வைக்க படுகிறது.
⏳ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
⏳ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
⏳ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
⏳ *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment