🌿🕯️🌿🕯️🌿🕯️🌿🕯️🌿🕯️🌿
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*மார்ச் 22*
🌿🕯️🌿🕯️🌿🕯️🌿🕯️🌿🕯️🌿
🐌 *இன்றைய நித்தியகடன்*
🐌 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🐌 *இன்றைய சாதகம்*
🐌 திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
🐌 *இன்றைய நற்சிந்தனை*
🐌 மனதை எதன்மீது செலுத்தினாலும் மனம் அதுவாக மாறிவிடும். மனதிற்கான தனிச்சிறப்புமிக்க இந்த விஞ்ஞானத்தின் அடிப்படையில் மனதை தெய்வ நிலை மீது செலுத்தும் போது மனமும் அதே தெய்வநிலையாக தரத்தால், தன்மையால், தன்மாற்றம், இயல்பூக்கம், கூறுதலறம் எனும் இவையாவும் மனதிற்கு பெருகும். மனதை தெய்வநிலை மீது செலுத்தி பழகுவது கொஞ்சம் கடினமான வேலைதான். இருந்தபோதும் நமக்கு வேறு வழியே இல்லை. மனதினுடைய இன்னொறு பக்கத்திற்கு பயணப்பட்டே தீரவேண்டும்.
🐌 *இன்றைய தற்சோதனை*
🐌 நாம் இதனை இயலாத காரியம் என்று எண்ணி பிறகு பார்த்துக் கொள்ளலாம் என நாட்களை தள்ளிப்போட்டால், பழக்கத்தின் வழியே மனம் எதை எதையோ எண்ணிக்கொண்டு, மருந்துக்கும் பயனற்றதோடெல்லாம் இணைந்து கொண்டு அதுவாகி கொண்டே இருக்கும். இது யாவும் மனித வாழ்க்கைக்கு சிறிதும் உதவப்போவதில்லை. ஆரோக்கியமான வீட்டு உணவு அவ்வளவாக ருசி இருக்காது, ஆனால் உணவகங்களில் (ஹோட்டல்) பல ருசியில் விதவிதமாக பல உணவுகள் கிடைக்கும். அவை அனைத்தும் ஆரோக்கியமில்லாதது.
🐌 *இன்றைய பண்புப்பயிற்சி*
🐌 போலிகள் பிரமாண்டமாகவும் உண்மை சாதாரணமாகவும் தான் இருக்கும். நாம்தான் தேர்ந்தெடுப்பதில் மிக கவனமாக இருக்க வேண்டும். இதுநாள் வரை போலியாக வாழ்ந்து நாம் எதை சாதித்தோம் என்று எண்ணிப் பார்த்தால் எதுவுமே இல்லை. நடித்து நாம் சேர்த்து வைத்த அனைத்தும் நம்மோடே இருந்து கொண்டு நம்மை விட திறமையாக நடிக்கும் இது இயற்கையின் நீதி. ஆக உண்மையோடு இணைந்து உண்மையாக பழகி உண்மையாக வாழ்வோம். வாழ்க வளமுடன்...
🐌 *இன்றைய மூலிகை*
🐌 *அருகம்புல் பானம்* ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.
🐌 அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும்.
🐌 இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.
🐌 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🐌 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🐌 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🐌 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment