நித்தியகடன் மார்ச் 21 2021

🎴🎼🎴🎼🎴🎼🎴🎼🎴🎼🎴

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*மார்ச் 21*

🎴🎼🎴🎼🎴🎼🎴🎼🎴🎼🎴

🎯 *இன்றைய நித்தியகடன்*

🎯 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🎯 *இன்றைய சாதகம்*

🎯 ஞாயிற்றுகிழமை 
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம் 
மாலை:- இறைநிலை தவம்.

🎯 *இன்றைய நற்சிந்தனை*

🎯 எதனோடு நம் மனம் இணையவில்லையோ அதைப் பற்றிய தெளிவும், அதைப்பற்றிய அறிவு உயர்வும் நமக்கு இருக்காது. உங்களுடைய மனதை எதனோடு இணைத்திக் கொள்ள வேண்டும், எதை நீங்கள் உணர வேண்டும், எதை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள். தேர்ந்தெடுத்து தேர்ச்சி பெறுவதற்கு தேடல் மிகவும் முக்கியமானது. உங்களுடைய எண்ணம் மட்டும் தான் உண்மை என்று நம்பி உங்களிடம் நீங்களே ஏமாந்துவிடாதீர்கள்.

🎯 *இன்றைய தற்சோதனை*

🎯 பொருத்தமானது, பொருத்தமில்லாதது, என்பதை எல்லாம் உங்களுடைய அறிவின் கீழே இருந்து சிந்திக்கிறீர்கள். உங்களுடைய அனுபவ அறிவுக்கு கீழ்தான் உங்களால் சிந்திக்க முடியும், செயல்பட முடியும். எப்போதும் அறிவை வளர்ச்சி நிலையிலேயே வைத்துக் கொண்டு வாழ முனைய வேண்டும். இந்த முயற்சி அறிவை எப்போதும் நமக்கு உயர்த்தி கொண்டே இருக்கும். தற்சோதனை இதனால் மட்டும்தான் நாம் தனித்துவம் பெற முடியும்.

🎯 *இன்றைய பண்புப்பயிற்சி*

🎯 நமக்கு தெரிந்தது மட்டும் தான் உண்மை என்று நம்பும் மனம், செயல்படாமல் சிந்திக்காமல் நின்று விட்டது என்றே பொருளாகும். படித்து உணர்ந்து கொள்ளும் அறிவு சுய ஆராய்ச்சியில் தன்னை இணைத்துக் கொண்டு உயர்வு பெறும் அறிவு பல்வேறுபட்ட நிலைகளில் இயங்குகிறது. சொந்த முயற்சியினால் வாழ்வை ஆராய்ந்து எண்ணம், சொல், செயல் மூன்றையும் ஒழுங்கு செய்து கொள்ளும் பண்பில் உயர்வோம். வாழ்க வளமுடன்...

🎯 *இன்றைய மூலிகை*

🎯 *துளசி* தேவையான பொருட்கள்
துளசி இலை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
நாட்டு சர்கரை – தேவையான அளவு

🎯 *செய்முறை*
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். துளசி தேநீரைதயார்.

🎯 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🎯 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🎯 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்.*

🎯 * மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments