🕳️🌀🕳️🌀🕳️🌀🕳️🌀🕳️🌀🕳️
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*மார்ச் 20*
🕳️🌀🕳️🌀🕳️🌀🕳️🌀🕳️🌀🕳️
☄️ *இன்றைய நித்தியகடன்*
☄️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
☄️ *இன்றைய சாதகம்*
☄️ சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
☄️ *இன்றைய நற்சிந்தனை*
☄️ நான் பேசுவதும், செய்வதும், எண்ணுவதும் சரி என்று யோசிக்கும் அதேசமயம் நான் பேசுவதும், செய்வதும், எண்ணுவதும் தவறு என்றும் யோசித்துப் பாருங்கள். நமக்குள் இருக்கக்கூடிய பேருண்மையோடு சேர்வதற்கான வழிமுறைகளில் இதுவும் ஒன்றாகும். இவ்வாறாக நம்மை நாமே கண்காணித்து கணக்கெடுத்துக் கொண்டு, எண்ணிலே இருக்கும் என்னை உணர்வதற்கு முழுமையாக, பொறுப்புடனும் அக்கறையுடனும் முயற்சி செய்ய வேண்டும்.
☄️ *இன்றைய தற்சோதனை*
☄️ நாம் வேகமாக சென்று கொண்டே இருக்கிறோம் நம்மை கவனிக்கத் தவறுகிறோம். இருந்துவிட்டு போகட்டும், நடந்தது நடந்து விட்டது, என்றெல்லாம் சிந்தித்து தட்டிக்கழிப் போமேயானால் நம்முடைய தனித்துவம் என்ன என்பது, நமக்கு என்றென்றும் புரியாத புதிராகவே இருந்து விடும். அவ்வாறாக நாம் வாழ்ந்து விட்டு போவதற்கு இப்பூமியில் இந்த மனித தோற்றத்தை பெறவில்லை என்பதை உணர்வோம். இருப்பது ஒன்றே ஒன்று தான், அந்த ஒன்றுடன் ஒன்றிக் கலக்க வேண்டும்.
☄️ *இன்றைய பண்புப்பயிற்சி*
☄️ ஒன்றிக் கலப்பதற்கு நமக்கு பல்வேறு வகையான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் முறையானதும் உண்டு, முறை அற்றதும் உண்டு. நாம் சரியானதை தேர்ந்தெடுத்து பயணம் செய்தாலும் கூட, நம்மை திசை திருப்ப நமக்குள்ளாகவே மாயை இருக்கிறது. அவற்றுக்கெல்லாம் இடம் கொடுக்காமல் மயங்கி விடாமல் உணர்தல், துய்த்தல், பிரித்துணர்தல் எனும் பண்புகளில் உயர்ந்து, மலர்ந்த அறிவோடு விழிப்பு நிலை கொண்டு அவைகளைக் கடந்து கடைத்தேறுவோம். வாழ்க வளமுடன்...
☄️ *இன்றைய மூலிகை*
☄️ *இஞ்சி + சின்ன வெங்காயம் + நீராவி பிடித்தல்*
☄️ இஞ்சி 15 கிராம்
தண்ணீர் 30ml
தேன் ஒரு டீஸ்பூன்
☄️ செய்முறை:- இஞ்சியை நன்றாக அரைத்து தண்ணீர் கலந்து அதில் உள்ள சுண்ணாம்பு படிந்த பின் தெளிந்த சாறை மட்டும் எடுத்துக் கொள்ளவும், அதனோடு தேன்கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் தினமும்.
☄️ சின்ன வெங்காயம் 15 கிராம்
தண்ணீர் 30ml
தேன் ஒரு டீஸ்பூன்
☄️ செய்முறை:- சின்ன வெங்காயத்தை நன்றாக அரைத்து தண்ணீர் கலந்து சாறு எடுத்துக் கொள்ளவும், அதனோடு தேன்கலந்து மாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் தினமும்.
☄️ நீராவி பிடித்தல்:-
குடிநீர் 1,1/2 லிட்டர்
நன்றாக கொதிக்கவைத்து ஒரு போர்வையை போர்த்தி வாய் வழியாக இழுத்து மூக்கு வழியாகவும். மூக்கு வழியாக இழுத்து வாய் வழியாகவும் மாற்றி மாற்றி நீராவியை இழுத்து விடவும். காலை, மாலை இரண்டு வேளையும் பயன்படுத்தலாம். குறிப்பு:- மினரல் வாட்டர் தவிர்க்கவும்.
☄️ நன்மைகள்:- ஆஸ்மா, நெஞ்சுசளி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, அஜிரணம் என அனைத்தும் குணமாகும், *குறிப்பு:- இஞ்சி சாறும், சின்ன வெங்காயம் சாறும் குழந்தைகளுக்கு 2.5ml போதுமானது*.
☄️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
☄️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
☄️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
☄️ *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment