🔥👣🔥👣🔥👣🔥👣🔥👣🔥
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*மார்ச் 18*
🔥👣🔥👣🔥👣🔥👣🔥👣🔥
🌌 *இன்றைய நித்தியகடன்*
🌌 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🌌 *இன்றைய சாதகம்*
🌌 வியாழக்கிழமை
காலை:- துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
🌌 *இன்றைய நற்சிந்தனை*
🌌 மண்ணோடு தொடர்புடைய மூலாதாரம், நீரோடு தொடர்புடைய சுவாதிஷ்டானம், நெருப்போடு தொடர்புடைய மணிபூரகம், காற்றோடு தொடர்புடைய அனாகதம், விண்ணோடு தொடர்புடைய விசுக்தி, காந்தத்தோடு தொடர்புடைய ஆக்கினை, தெய்வநிலையோடு தொடர்புடைய துரியம் நம் உடலுக்குள் உள்ள ஏழு ஆதாரங்களும் பிரபஞ்சவெளியில் உள்ள ஏழு ஆதாரங்களோடு இணையும்போது மாற்றங்கள் நிகழ வேண்டும். புதிய ஏற்பாடுகள் நமக்குள் துவங்க வேண்டும்.
🌌 *இன்றைய தற்சோதனை*
🌌 நாம் அந்தந்த மையங்களில் மனம் செலுத்தி தவம் செய்யும்போது, அந்தந்த மையத்துக்கு உரிய ஆற்றல் நம் உடலுக்குள் ஊடுருவி, அது அதற்குரிய மையத்தில் நிரம்பும். இந்த விஞ்ஞான நிகழ்ச்சி நடைபெறும் போது கூடவே இன்னொரு மெய்ஞான நிகழ்வும் நடைபெறும். இந்த மையங்களுக்கு உள்ளே நிரம்பும் சக்தி, அந்தந்த மையத்தின் உடைய உற்பத்தி ரகசியங்கள், இயக்கம், நுட்பம், இணக்கத்தன்மை, படைப்புத்திறன், பெருந்தகைமை, நுண்மாண் நுழைபுலன், ஏற்புத் திறன் அனைத்தையும் நமக்குள் பெறுகி அனுபவமாகும்.
🌌 *இன்றைய பண்புப்பயிற்சி*
🌌 இந்த உள்ளுணர்வு கல்வியில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டவர்களுக்கு, உள்ளும் புறமும் இந்த பிரபஞ்ச சக்தி ஒன்று கலக்கும் போதும், சிலருக்கு உடனடியாக மாற்றங்கள் உருவாகும், சிலருக்கு காலதாமதமாகும், பலர் இதை அறியவே மாட்டார்கள். உதாரணத்திற்கு நீரில் அரிசியை போட்டால் நீருக்கு தனக்குள் இடம் கொடுத்து அரிசி நன்றாக ஊறும். கல்லை நீருக்குள் போட்டால் அது எவ்வளவு நாட்கள் ஆனாலும் நீருக்கு தனக்குள் இடம் தராது. இதுபோலத்தான் இறைவனுக்கு உங்களுக்குள் இடம் கொடுங்கள். இடம் எல்லாம் அவனே ஆவான் வாழ்க வளமுடன்...
🌌 *இன்றைய மூலிகை*
🌌 *கொத்தமல்லி* ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர் (காய்ச்சி ஆற வைத்தது) இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
🌌 அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும்.
🌌 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🌌 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🌌 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🌌 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment