நித்தியகடன் மார்ச் 17 2021

❄️🌴❄️🌴❄️🌴❄️🌴❄️🌴❄️

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*மார்ச் 17*

❄️🌴❄️🌴❄️🌴❄️🌴❄️🌴❄️

🌾 *இன்றைய நித்தியகடன்*

🌾 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🌾 *இன்றைய சாதகம்*

🌾 புதன்கிழமை 
காலை:- தீபப்பயிற்சி, 
ஒன்பது மையம், 
மாலை:- நித்யானந்தம்.

🌾 *இன்றைய நற்சிந்தனை*

🌾 அந்தந்த மண்ணில் அந்தந்த புல்வகை தான் முளைக்க வேண்டும், என்பது ஒரு விஞ்ஞான இயற்கை சட்டம். இந்த விஞ்ஞான இயற்கை சட்டத்தின் அடிப்படையிலேயே நம் உடலும், உயிரும், மனமும் இயங்குகிறது. அந்தந்த பக்குவ மனதிற்கு அந்தந்த அனுபவம் தான் கிட்டும் என்று, ஒரு விஞ்ஞான இயற்கை சட்டமிருக்கிறது, அவ்வாறுதான் நடைபெறவும் செய்கிறது. இதனை தாண்டி பல விஷயங்களை நாம் அனுபவம் ஆக்கிக்கொள்ள வேண்டுமென்று முயற்சி செய்யும் போது, அதற்கு தகுந்த மாற்றங்கள் உடலிலும், உயிரிலும், மனதிலும் ஏற்பட வேண்டும்.

🌾 *இன்றைய தற்சோதனை*

🌾 அந்த ஏற்பாடுகளை நோக்கி நம்மை இறைநிலை இயல்பாகவே உள்ளிருந்து தூண்டுகிறது. புறத்திலிருந்து இந்த ஏற்பாடுகளுக்கு நாம் நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும். இறைநிலையினுடைய இந்த தூண்டுதல்களுக்கு நம்மை நாம் தயார் செய்து கொள்வதற்காகவே உடல்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இந்த நான்கு விதமான கட்டமைப்புகளும் வழங்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகள் எதுவும் ஏற்படுத்திக் கொள்ளாமல் நமக்கு மெய்ஞான அனுபவங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை.

🌾 *இன்றைய பண்புப்பயிற்சி*

🌾 விஞ்ஞான, மெய்ஞான, இறை சட்டத்தில் கருமையம் ஒன்றே பிரதான பொருளாகும். கருமையத்தில் உள்ள தன்மை தரம் இவைகளுக்கு ஏற்பவே நம் வாழ்வில் நமக்கு என்னென்ன தேவைகள் என்னென்ன அனுபவம் ஏற்பட வேண்டுமோ, அதற்கு இயல்பாகவே நாம் தயாராகி வரும் இந்த கருமையத்தை மனவளக்கலை யோகா மூலமாக புதுப்பித்துக்கொள்ள முடியும். புதிய ஏற்பாடுகளை நோக்கி நகற்வோம், நாளைய வாழ்வை நமதாக்கி வாழ்வோம். வாழ்க வளமுடன்...

🌾 *இன்றைய மூலிகை*

🌾 *செம்பருத்தி* இரண்டு செம்பருத்தி பூ
(மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.  

🌾 இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.

🌾 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🌾 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🌾 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🌾 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments