🍇🍊🍇🍊🍇🍊🍇🍊🍇🍊🍇
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*மார்ச் 14*
🍇🍊🍇🍊🍇🍊🍇🍊🍇🍊🍇
🌷 *இன்றைய நித்தியகடன்*
🌷 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🌷 *இன்றைய சாதகம்*
🌷 ஞாயிற்றுகிழமை
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம்
மாலை:- இறைநிலை தவம்.
🌷 *இன்றைய நற்சிந்தனை*
🌷 ஒவ்வொரு பூக்களுக்கும் ஒவ்வொரு வாசனை உண்டு, ஒவ்வொரு பழங்களுக்கும் ஒவ்வொரு வாசனை உண்டு, அது போல மனிதனின் ஒவ்வொரு எண்ணத்திற்கும் ஒவ்வொரு வாசனை உண்டு. மனதை ஆழ் நிலைக்கு அப்பால் கொண்டு சென்று பழகி, அங்கு நின்று நிலைத்து வாழும் போது இந்த வாசனையை நுகரமுடியும். நம்மை சுற்றி மூலிகை வாசமாக இருக்கும். அந்த வாசனையை இதற்கு முன் எங்கும் அனுபவித்து இருக்க மாட்டோம். நம்மைச் சுற்றியுள்ள காந்த களம் மிகவும் அடர்த்தியாக இருக்கும்.
🌷 *இன்றைய தற்சோதனை*
🌷 புலன்கள் வழியாக வெளியே விரிந்து திரியும் மனதை உள்முகமாக திருப்பி, புலன்கள் வழியாகவே உள்நோக்கி பயணம் சென்று உயிரில் ஒடுங்கி உயிராக நின்று நிலைக்கும் போது, மூளை செல்கள் மிகச்சிறந்த கட்டமைப்பை பெறுகிறது. அதன் விளைவாக உயர்ந்த காந்தமும் உயிர் களமும் அமைகிறது. மூளை பகுதியில் எப்போதும் ஞானவாசம் வீசும் இதனுடைய ஆழம், அகலம், நீளம் அனைத்தையும் தற்சோதனை செய்து அங்கே வாழ முனைவோம்.
🌷 *இன்றைய பண்புப்பயிற்சி*
🌷 கலப்படமில்லாத நினைவுகள், கலப்படமில்லாத பேச்சு, கலப்படமில்லாத செயல், கலப்படமில்லாத வாழ்க்கை இவ்வாறாக திட்டமிட்டுக் கொண்டு நாளுக்கு நாள் நம்மை உயர்த்திக் கொண்டே செல்வோமேயானால் துவக்கத்தில் பலவிதமான இன்னல்களும் இடர்பாடுகளும் இருக்கும். ஆனால் முடிவு நிச்சயமாக சுபமாகவே அமையும், இதற்கு விடாமுயற்சி தேவை. வேதாத்திரி மகரிஷி ஒரு கவியில் *"எவரொருவர் குருவை அடிக்கடி நினைந்து ஒழுகினாலும் தப்பாது குருவின் அருள், நினைப்போர் தன்மை உயிரிலும் அறிவிலும் மாற்றம் காணும் இச்செயல் இயல்பூக்க நீதியாகும்"*. வாழ்க வளமுடன்...
🌷 *இன்றைய மூலிகை*
🌷 *துளசி* தேவையான பொருட்கள்
துளசி இலை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
நாட்டு சர்கரை – தேவையான அளவு
🌷 *செய்முறை*
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். துளசி தேநீரைதயார்.
🌷 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🌷 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🌷 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🌷 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment