🌿🔴🌿🔴🌿🔴🌿🔴🌿🔴🌿
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*மார்ச் 13*
🌿🔴🌿🔴🌿🔴🌿🔴🌿🔴🌿
🙏 *இன்றைய நித்தியகடன்*
🙏 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🙏 *இன்றைய சாதகம்*
🙏 சனிக்கிழமை இன்று அமாவாசை காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம்.
🙏 *இன்றைய நற்சிந்தனை*
🙏 முற்கால யோக முறைக்கும் தற்கால யோக முறைக்கும் நிறைய வேறுபாடு உண்டு. குண்டலினி யோக அனுபவங்களை சித்தர்கள் நிறைய பேசி இருக்கிறார்கள். புத்தகங்கள் மூலமாக தற்காலத்தில் அதை பற்றிய நேரடி அனுபவம் எதுவுமே இல்லாமல், பல சிந்தனையாளர்கள் எழுத்தாளர்கள் பெயருக்காக இந்த வேதாந்தம், சித்தாந்தம், உபநிஷத்துக்களை எழுத்தளவில் புரிந்து கொண்டு அதனையே அடிப்படையாகவைத்து, நடைமுறை வார்த்தை மூலம் மிகைப்படுத்தியும் மாற்றி கூறியும் நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. ஆக அவைகளையெல்லாம் தயவுசெய்து நன்கு தற்சோதனை செய்து பாருங்கள். முற்கால யோக முறையானது ஒரு முழுமை பெறாத நிலையில் ஆங்காங்கு பலவிதமாக இருந்திருக்கிறது. ஆக முழு அனுபவத்தோடு பக்கவிளைவு இல்லாமல் அவைகள் உருவாக்கப்பட்டது அல்ல. இக்கருத்தை எம்மக்களோடு பகிர்ந்து கொள்வது எம் தலையாகிய கடமையாய் உணருகின்றோம்.
🙏 *இன்றைய தற்சோதனை*
🙏 இந்த எளிய முறை குண்டலினி யோக பயிற்சியானது (வேதாத்திரியம்) முற்கால யோக முறைக்கு முற்றிலும் மாறுபட்டதாகும். "குடும்ப வாழ்வும் குண்டலினி யோகமும்" என்ற தலைப்பிலேயே விரிவாக்கம் செய்து உடல்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை என்று அத்துணை பயிற்சிகளையும் உருவாக்கி உயர்ந்த உலக அமைதி எனும் பெரும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டு, இதை வான் காந்தத்தில் நிரவி இப்பூமியில் விதைக்கப் பட்டிருக்கிறது. இது இறைநிலையின் பூரணமான எண்ணத்தின் முழு விளைவு மகரிஷியின் மூலமாக இம்மண்ணுலகில் வேதாததிரியம் வதைக்கப் பட்டிருக்கிறது.
🙏 *இன்றைய பண்புப்பயிற்சி*
🙏 உலக சமுதாய சேவா சங்கத்தில் உறுப்பினராக உள்ள அனைவரும் மிகவும் பாக்கியசாலிகள். ஏனெனில் நமக்கு அமைந்த குருவைப் போல முழுமையான ஞானகுரு நம்முடைய ஆசான் வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு கூட கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் இந்நேரம் உலக அமைதி நிறுவப் பட்டிருக்கும். ஆசான் வேதாத்திரி மகரிஷி அவர்களை விட நாம் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். பாக்கியசாலி என்ற சிந்தனையை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் யாம் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறோம். "நம் கடமை அறவாழ்வின் நாட்டத்தை சிறக்கட்டும்". வாழ்க வளமுடன்...
🙏 *இன்றைய மூலிகை*
🙏 *கருஞ்சீரகம்* தேவேயான பொருள் கருஞ்சீரகம் – 50gm,
வெந்தயம் – 250gm,
ஓமம் – 100gm
🙏 மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனித்தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும். இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்,இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.
🙏 தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது. தேவையான கொழுப்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது, இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.
🙏 நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது, மலச்சிக்கல் நீங்குகிறது,
பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது. மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது, ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது. நீரிழிவு நோய் கட்டுக்குள் வைக்க படுகிறது.
🙏 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🙏 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🙏 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🙏 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment