நித்தியகடன் மார்ச் 11 2021

⛰️🏈⛰️🏈⛰️🏈⛰️🏈⛰️🏈⛰️

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*மார்ச் 11*

⛰️🏈⛰️🏈⛰️🏈⛰️🏈⛰️🏈⛰️

🥥 *இன்றைய நித்தியகடன்*

🥥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🥥 *இன்றைய சாதகம்*

🥥 வியாழக்கிழமை 
காலை:- துரியதவம், 
மாலை:- இறைநிலைதவம்.

🥥 *இன்றைய நற்சிந்தனை*

🥥 மனிதர்களுக்கு இருக்கக்கூடிய உடல் துன்பத்தையும் மன துன்பத்தையும் போக்கிக் கொண்டு வாழ்வதே நிறைவான அமைதியான வாழ்வாகும். இவ்வகையான துன்பங்களைப் போக்கிக் கொள்வதற்கு, அதற்கு தகுந்த செயலை ஒவ்வொரு மனிதனும் கடைபிடிக்க வேண்டும். ஏசுநாதர் பைபிளில் கூறுவதை போல உன்னுடைய பாவகோப்பை நிரம்பும் வரை உனக்கு தண்டனை ஏதும் அளிக்கப்படமாட்டாது. இது முற்றிலும் உண்மையே, பாவத்தின் திணிவும் அடர்த்தியும் குறிப்பிட்ட சதவீதமாகும் வரை, நமக்கு எந்த ஒரு தண்டனையும் கிடைப்பது இல்லை. எப்போது அந்த சதவீதத்தை எட்டப்படுகிறதோ, அந்த நொடிப் பொழுதில் இருந்து இறைநீதி செயல் விளைவின் அடிப்படையில் விளைவுகளை கொடுக்க துவங்குகிறது.

🥥 *இன்றைய தற்சோதனை*

🥥 பாவ கோப்பை என்றும் புண்ணிய கோப்பை என்றும் இரண்டு விதமான கோப்பைகள், எல்லா மனிதர்களுக்குள்ளும் இருக்கிறது. புண்ணிய கோப்பையை நிரப்புவதற்கு சில நியமங்களை கடைப்பிடித்தே ஆக வேண்டும். நியமங்களை கடைபிடிக்காமல் எந்த ஒரு நல்ல விளைவையும் அனுபவிக்க இயலாது. அது என்ன நியமங்கள் என்றால் மிகவும் எளியது.... தினமும் நாம் செய்ய வேண்டிய உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இந்த நான்கு நியமங்களை கடைபிடித்தால் போதும் உடல் துன்பமும் மன துன்பமும் படிப்படியாக நம்மை விட்டு விலகும்.

🥥 *இன்றைய பண்புப்பயிற்சி*

🥥 இந்த நியமங்களை கடைபிடித்து கொண்டிருக்கும் போது மேற்சொல்லப்பட்ட நீதி இதுக்கும் பொருந்தும். நம்முடைய நியாயத் தராசு சரியான அளவில் சமமாக வந்து நிற்கும் வரை, நல்ல நியமங்களை செய்துகொண்டே இருக்க வேண்டும். அவைகளை கடைபிடித்து அவற்றினுடைய சதவீதத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். அதே இறைநீதி அதே செயல்விளைவு நீதியின் அடிப்படையில் நமக்கு நிறைவான உடல் நலம், மன வளம் ,உயிர் வளம் அனைத்தையும் வழங்கி நம்மோடு சேர்ந்து கொண்டு இறைநிலையும் வாழும். வாழ்க வளமுடன்...

🥥 *இன்றைய மூலிகை*

🥥 *கொத்தமல்லி* ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர் (காய்ச்சி ஆற வைத்தது) இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.

🥥 அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும். 

🥥 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🥥 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🥥 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🥥 * மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments