நித்தியகடன் மார்ச் 10 2021

💢🌿💢🌿💢🌿💢🌿💢🌿💢

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*மார்ச் 10*

💢🌿💢🌿💢🌿💢🌿💢🌿💢

🌐 *இன்றைய நித்தியகடன்*

🌐 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🌐 *இன்றைய சாதகம்*

🌐 புதன்கிழமை 
காலை:- தீபப்பயிற்சி, 
ஒன்பது மையம், 
மாலை:- நித்யானந்தம்.

🌐 *இன்றைய நற்சிந்தனை*

🌐 பொதுவாக இருக்கக் கூடிய சூழ்நிலை, சந்தர்ப்பம் அனைத்தும் அனைவருக்கும் எல்லா நேரத்திலும், எல்லா காலத்திலும் பொருந்தாது. இதில் வேறுபாடுகளும், மாறுபாடுகளும், நிச்சயமாக இருக்கும். உதாரணத்திற்கு அனைவரும் உணவு உட்கொள்ள வேண்டும். ஆனால் எல்லா நேரங்களிலும் உணவு உட்கொண்டு கொண்டே இருக்கக் கூடாது. அனைவரும் தவம் செய்ய வேண்டும் ஆனால் எல்லா நேரங்களிலும் தவம் செய்து கொண்டே இருக்கக் கூடாது.

🌐 *இன்றைய தற்சோதனை*

🌐 மேற் கூறப்பட்ட சூழ்நிலைகளை சற்று விரிவாக தற்சோதனை செய்வோம். உரிய நேரத்தில் தவம் செய்து விட்டு, மற்ற நேரங்களில் உழைக்க வேண்டும். உரிய நேரத்தில் உணவை உட்கொண்டு விட்டு மற்ற நேரங்களில் உழைக்க வேண்டும். தனக்கும், குடும்பத்திற்கும், சுற்றாத்தாருக்கும், ஊறாருக்கும், உலகிறக்கும் என ஐந்து வகையான கடமைகள் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உண்டு. இந்த கடமைகளில் இருந்து யாரும் நழுவுதல் கூடாது. இவைகளை செய்யாமல் இருக்கவும் கூடாது. நன்றாக தற்சோதனை செய்யுங்கள். இந்த ஐந்து வகையான கடமைகளைச் செய்யும் போதுதான் நமக்கு தவமும், உணவும், நல்ல விளைவைத் தரும்.

🌐 *இன்றைய பண்புப்பயிற்சி*

🌐 எல்லாவற்றுக்குள்ளும் சிறப்பாக இயங்கும் பேரறிவு அது, இல்லாத இடமேகிடையாது. அதை அனைத்தையும் உணர்ந்து, உணர்ந்த நிலையில் தொண்டாற்றி இன்பம் காண்போம். இந்த உண்மையை உணர்ந்து தொண்டு செய்யும் போது, இந்த பண்பை நிறைவாக ஏற்றுக் கொள்ளும்போது, வாழ்க்கையில் மிகச்சிறந்த உண்மைகள் நம் அறிவில் வெளிச்சமாக வெளிப்படும். வாழ்க வளமுடன்..!

🌐 *இன்றைய மூலிகை*

🌐 *செம்பருத்தி* இரண்டு செம்பருத்தி பூ
(மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.  

🌐 இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.

🌐 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🌐 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🌐 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🌐 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments