நித்தியகடன் மார்ச் 09 2021

🔴♻️🔴♻️🔴♻️🔴♻️🔴♻️🔴

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*மார்ச் 09*

🔴♻️🔴♻️🔴♻️🔴♻️🔴♻️🔴

🌀 *இன்றைய நித்தியகடன்*

🌀 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🌀 *இன்றைய சாதகம்*

🌀 செவ்வாய்கிழமை 
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.

🌀 *இன்றைய நற்சிந்தனை*

🌀 ஒரு உடலில் ரத்தத்தின் அளவு குறையாமல் இருக்க வேண்டும். ரத்தத்தில் எல்லாவிதமான சத்துப் பொருட்களும் இருக்க வேண்டும். உடல் உள்ளுறுப்புகள் அனைத்தும் இருதயம், நுரையீரல், இரைப்பை, மண்ணீரல், கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல், நாளமில்லா சுரப்பிகள் அனைத்தும் சீராக இயங்க வேண்டும். இவ்வாறு உடல்நிலை இருந்து இயங்கும் போது அந்த உடலுக்கு எந்தவிதமான நோயும் நோய்த்தொற்றும் ஏற்படாது. நோய் எதிர்ப்பு சக்தி என்பதும், உடல் ஆரோக்கியம் என்பதும் இதனுடைய அடிப்படையிலேயே அமைகிறது.

🌀 *இன்றைய தற்சோதனை*

🌀 உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இவைகளில் நாள் தவறாமல் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் போதும், மனம் ஒன்றி பயிற்சிகளை செய்யும் போதும் பல வகையிலும் முறையிலும் ஆய்வு செய்து இதனுடைய விஞ்ஞானத்தை உணர்ந்து கொள்ளும் போதும். இவை அனைத்தும் சாத்தியம் உணவை உண்ணும் போது வேறு எந்த சிந்தனையும் செயலும் இல்லாமல் உணவின் மீது முழு கவனமும் வைத்து, நன்றாக மென்று உணவை குடிக்க வேண்டும். "உணவை குடி, நீரை விழுங்கு" என்ற பழமொழிக்கு ஏற்றவாறு உணவை நன்றாக மென்று உமிழ்நீரோடு கலந்து குடிக்க வேண்டும். நீரை சிறுக சிறுக விழுங்க வேண்டும்.

🌀 *இன்றைய பண்புப்பயிற்சி*

🌀 உணவில் ஆறுவகை சுவையும் கட்டாயம் இருக்க வேண்டும். (நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஒரு நிலக்கடலை அளவிற்கு நாட்டுச்சக்கரை அல்லது கருப்பட்டி எடுத்துக்கொள்ளலாம். குறிப்பு:- வெள்ளை சர்க்கரை யாருமே உபயோகப்படுத்த வேண்டாம் இனிப்பு சுவையை முதல் உணவாக எடுத்துக் கொள்ளவும்) அளவோடு முறையோடு இவைகளை வரையறைத்துக் கொள்ளும் போது உடல் சக்தி, மனோசக்தி, உயிர் வளம் அனைத்தும் நிறைவாகவே நமக்குள் இருக்கும். இதன் விளைவாக இறை ஞானம் பெருகும். வாழ்க வளமுடன்...

🌀 *இன்றைய மூலிகை*

🌀 *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.

🌀 இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும். 

🌀 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🌀 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🌀 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🌀 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments