நித்தியகடன் மார்ச் 07 2021

🗾🎴🗾🎴🗾🎴🗾🎴🗾🎴🗾

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*மார்ச் 07*

🗾🎴🗾🎴🗾🎴🗾🎴🗾🎴🗾

🍀 *இன்றைய நித்தியகடன்*

🍀 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🍀 *இன்றைய சாதகம்*

🍀 ஞாயிற்றுகிழமை 
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம் 
மாலை:- இறைநிலை தவம்.

🍀 *இன்றைய நற்சிந்தனை*

🍀 இந்த பிரபஞ்சம் பல்வேறு அற்புதங்களை உள்ளடக்கமாகக் கொண்டது. இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு விதமான தன்மையும், தரமும், நுண்மையும், இயக்கமும், சிறப்புக்களும் வாய்ந்தது. நாம் அவைகளை எல்லாம் உணர்ந்து கொள்ள வேண்டுமானால், நாம் அதற்கு தகுந்த செயல் பண்புகளை வளர்த்துக் கொள்ளவேண்டும். எந்த அளவு நம்மை நாம் பண்படுத்திக் கொண்டு சிந்தித்து வாழ்கிரோமோ, அந்த அளவிற்கும் முறைக்கும் ஏற்ப இந்த பிரபஞ்சத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

🍀 *இன்றைய தற்சோதனை*

🍀 நம் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய அனைத்து வகையான சிக்கல்களுக்கும், இன்னல்களுக்கும், இடர்பாடுகளுக்கும் தீர்வு இந்த பிரபஞ்சத்தில் இருக்கிறது. பிரபஞ்சத்தின் இயக்கமும் தனிச்சிறப்பும் எல்லா வகையான உயிரினங்களோடும் ஒன்றிணைக்கப்பட்டும், இந்த ஒருங்கிணைந்த நிலையில் தான் இயங்குகிறது. இதன்விளைவாக நாம் இந்த பிரபஞ்சத்தை உணர்ந்து கொள்வதில் எந்த ஒரு சிரமமும் இருக்காது. மீறி சிரமம் இருப்பதாக உணர்கிறோமேயானால், அதற்கும் காரணம் கட்டாயம் இருக்கும்.

🍀 *இன்றைய பண்புப்பயிற்சி*

🍀 நம் கருமையத்தில் இருக்கக்கூடிய கர்மவினை பதிவுகளுக்கு ஏற்ப நாம் எடுக்கும் முயற்சிகளுக்கு, நமக்கு கிடைக்க வேண்டிய அனுபவங்கள் காலதாமதம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. பிரபஞ்சத்துக்கு உள்ளாக இருக்கக்கூடிய பொருள்களோடு இணைய வேண்டுமானால் நம் கருமையத்தில் அதற்கு தகுந்த தரமேம்பாடும், தன்மை மேம்பாடும் பெற வேண்டும். அப்போதுதான் ஜீவாத்மா பரமாத்மாவோடு இணைந்து பிரபஞ்ச அனுபவங்களை தனதாக்கிக் கொள்ள முடியும். அதுவரை பொறுமையாகவும் அமைதியாகவும் முயற்சி செய்வது நம் கடமையாகும். வாழ்க வளமுடன்... 

🍀 *இன்றைய மூலிகை*

🍀 *துளசி* தேவையான பொருட்கள்
துளசி இலை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
நாட்டு சர்கரை – தேவையான அளவு

🍀 *செய்முறை*
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். துளசி தேநீரைதயார்.

🍀 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🍀 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🍀 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🍀 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments