🐾🎛️🐾🎛️🐾🎛️🐾🎛️🐾🎛️🐾
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஏப்ரல் 01*
🐾🎛️🐾🎛️🐾🎛️🐾🎛️🐾🎛️🐾
⚡ *இன்றைய நித்தியகடன்*
⚡ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
⚡ *இன்றைய சாதகம்*
⚡வியாழக்கிழமை
காலை:- துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
⚡ *இன்றைய நற்சிந்தனை*
⚡ நாம் உடுத்துகின்ற துணியில் இருக்கக்கூடிய அழுக்குகளை போக்க வேண்டுமானால் சலவை கட்டி, சலவைத்தூள், நீர், வாஷிங் மிஷின் என இவ்வளவையும் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஒரு துணியில் இருக்கக்கூடிய அழுக்கை அகற்ற இவ்வளவு பொருட்கள் தேவைப்படுகிறது. இவ்வளவும் சரியாக முறையாக நடந்தால் தான் அந்த அழுக்கு போகும்.
⚡ *இன்றைய தற்சோதனை*
⚡ உயிரில் இருக்கக்கூடிய அழுக்கை களங்கத்தை போக்க உடல் பயிற்சி, காயகல்ப பயிற்சி, தவ பயிற்சி, தற்சோதனை பயிற்சி இவை மூலமாகவும், ஒழுங்கான செயல்கள் மூலமாகவும் மட்டும்தான் அகற்ற முடியும். உயிர் மீது படிந்துள்ள களங்கங்களை போக்குவதற்கு இதன் வழியாக தான் முயற்சி செய்ய வேண்டும். இதை தவிர்த்து நாம் எந்த வழி முறையை பின்பற்றினாலும், அந்த அழுக்கு அந்தக் களங்கம் நீங்க போவதே கிடையாது.
⚡ *இன்றைய பண்புப்பயிற்சி*
⚡ புலன் உணர்வுகளை ஒருங்கிணைத்து கொண்டு அறிவின் வழிகாட்டுதலின்படி வாழக்கூடிய பண்பு தான் மனிதனுக்கு நல்லதொரு வாழ்க்கை முறையாகவும் பருவுடல், நுண்ணுடல், காந்த உடல் இதனுடைய ஆரோக்கியநிலைப் பாடாகவும் அமைகிறது. மனிதன் ஞானத்தினுடைய ஒட்டுமொத்த உருவமாகும். மனிதனுக்கு மட்டுமே ஞானம் என்பது சாத்தியம். இந்த சிறப்பான பண்பில் நம்மை தொய்வு இல்லாமல் நாளுக்கு நாள் வளர்த்துக் கொள்ள வேண்டும். வாழ்க வளமுடன்...
⚡ *இன்றைய மூலிகை*
⚡ *கொத்தமல்லி* ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர் (காய்ச்சி ஆற வைத்தது) இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
⚡ அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும்.
⚡ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
⚡ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
⚡ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
⚡ *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment