நித்தியகடன் பிப்ரவரி 25 2021

🎱⛳🎱⛳🎱⛳🎱⛳🎱⛳🎱

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*பிப்ரவரி 25*

🎱⛳🎱⛳🎱⛳🎱⛳🎱⛳🎱

🏜️ *இன்றைய நித்தியகடன்*

🏜️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🏜️ *இன்றைய சாதகம்*

🏜️ வியாழக்கிழமை 
காலை துரிய தவம். மாலை இறைநிலை தவம்.

🏜️ *இன்றைய நற்சிந்தனை*

🏜️ மனித வாழ்க்கையில் போலிகள் நிறைய இருக்கின்றன. இந்த போலிகளை எல்லாம் அகற்றிக் கொள்ள வேண்டுமானால், அனைவரும் செய்ய வேண்டிய காரியம் என்று ஒன்று இருக்கிறது. அது உங்களுடைய வாழ்க்கை சூழ்நிலைகள் அனைத்திற்கும் ஆதரங்கள் உண்டு. ஆக எல்லா ஆதரங்களையும் தேடி கண்டறிந்து கொள்ளுங்கள். ஆதரங்கள் இல்லாமல் ஒரு வாழ்க்கை சூழ்நிலையில் இருந்து மற்றொரு வாழ்க்கை சூழ்நிலைக்கு நகரமுயற்சி செய்யாதீர்கள். ஏனெனில் மனித வாழ்க்கையின் அச்சானியே ஆதாரங்கள் தான்.

🏜️ *இன்றைய தற்சோதனை*

🏜️ நமக்குள்ளாக இருக்கும் போலிகளை இனம் கண்டுகொண்டு, அவைகளை வேரோடு அகற்றி கொள்வதற்கு ஆழ்ந்த ஆராய்ச்சியும், ஆராய்ச்சியின் முடிவான ஆதாரங்களும் மிகவும் அவசியம். இதற்கு உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழி நடத்துவதாகவும், உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இவை நான்கையும் பயன்படுத்தித்தான் உங்களுக்கு உரிய சரியான ஆதாரங்களை சேகரித்து கொள்ள முடியும். எதனை நாம் நினைக்கின்றோமோ அதனுடைய தன்மை தரம் யாவும் நமக்குள் இயல்பாகவே உயர்வு பெறும் என்பது இயற்கையின் இறைவனின் நீதி.

🏜️ *இன்றைய பண்புப்பயிற்சி*

🏜️ ஆங்காங்கு வாழ்க்கை பயணம் திசை திரும்பும் போது சில பல சோர்வுகள் ஏற்படத்தான் செய்யும். சோர்வுகளின் போது நாம் சோர்ந்து விடாமல் நம்மை மேலும் மேலும் மெருகேற்றிக் கொள்வதற்கு முறையானது ஒரு திட்டம் நம்மிடையே இருக்க வேண்டும். குறிக்கோள் இல்லாது வாழ்க்கையில் எந்த ஒரு இலக்கையும் நாம் சென்று சேர முடியாது. ஆக திட்டமிட்டு குறிக்கோளோடு வாழ்வில் உயர்வு பெறுவோம். வாழ்க வளமுடன்...

🏜️ *இன்றைய மூலிகை*

🏜️ *கொத்தமல்லி* ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர் (காய்ச்சி ஆற வைத்தது) இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.

🏜️ அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும். 

🏜️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🏜️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🏜️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🏜️ *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments